குப்பை மாதிரி கெடக்கு.. லட்ச கணக்குல விற்பனையாகமல் ஒரே ஒரு நிறுவனத்திடம் தேங்கி கிடக்கும் வாகனங்கள்!

உலகம் அறிந்த இரண்டு சக்கர வாகன (Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் கேடிஎம் (KTM)-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் மட்டுமல்ல உலக அளவில் உள்ள இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான நிறுவனமே வாகன உற்பத்தியாளர்கள் சந்திக்கும் மிக மோசமான சிக்கல் ஒன்றில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்திடம் இப்போது வரை விற்பனையாகமல் லட்சக் கணக்கில் இரண்டு சக்கர வாகனங்கள் தேங்கிக் கிடப்பதாகவே தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிறுவனம் விற்பனையாகிவிடும் என நினைத்து பல லட்சம் யூனிட்டுகள் வாகனங்களை முன்கூட்டியே உற்பத்தி செய்து வெளியேற்றி இருக்கின்றது. இவையே தற்போது விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. நிர்வாகத்தின் இந்த தவறுதலான கணிப்பே அதன் தற்போதைய நிலைக்கு மிக முக்கியமான கரணமாக அமைந்து இருக்கின்றது.

Ktm unsold inventory

இந்த சூழலைச் சமாளிக்கும் விதமாக கேடிஎம் நிறுவனம் ஆண்டின் தொடக்கத்திலேயே தற்கால இழுத்து மூடலை மேற்கொள்ள இருப்பதாக மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேவைக்கு அதிகமாக வாகனங்களை உற்பத்தி செய்ததால் கேடிஎம் நிறுவனம் பெரும் நிதி சுமையில் சிக்கி இருக்கின்றது.

தற்போதைய தகவல்களின்படி அது 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதி சுமையில் சிக்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இத்தகைய பெரும் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்கவே அவர்கள் 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் உற்பத்தி ஆலைகளில் தற்காலிகமாக உற்பத்திகளை நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

நிறுவனத்தின் இந்த மாதிரியான செயலால் ஏற்கனவே ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பாதிப்படையத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது கூடுதலாக கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள கேடிஎம் ஊழியர்கள் பலர் தங்களின் டிசம்பர் மாதத்திற்கான போனஸ் மற்றும் சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

கேடிஎம் நிறுவனத்திடம் இப்போதைய நிலவரப்படி 2.65 லட்சம் யூனிட்டுகளுக்கும் அதிகமான டூ-வீலர்களே விற்பனையாகமல் தேக்கமடைந்துக் காணப்படுகின்றன. உலக அளவில் தேக்கமடைந்துக் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இதுவாகும். உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் கேடிஎம்-க்கே இந்த நிலைமையா என்றே பலரையும் அதிர்ச்சியில் மூழ்க செய்திருக்கின்றது இந்த தகவல்.

கேடிஎம் நிறுவனம் மட்டுமல்ல இன்னும் பல நிறுவனங்கள் இதுபோன்று விற்பனை ஆகாத வாகனங்களை மிக அதிகளவில் தங்கள் கை வசம் வைத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இப்போது கேடிஎம் நிறுவனமே பேசு பொருளாக மாறி இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்திய இளைஞர்களின் ஃபேவரிட் டூ-வீலர் பிராண்டு ஆகும்.

கேடிஎம் நிறுவனம் இந்தியாவின் நேக்கட், சூப்பர் ஸ்போர்ட், டிராவல், மோட்டோகிராஸ் மற்றும் என்டூரோ ஆகிய பிரிவுகளின் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் இருப்பதிலேயே விலை குறைவான டூ-வீலராக 125 ட்யூக் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 1.81 லட்சம் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 125 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு டிஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 10.7 kW (14.5 பிஎஸ்) மற்றும் 12 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கேடிஎம் பைக்குகளுக்கு அதிக ஸ்போர்ட்டியான பைக்கை விரும்புவோர் மத்தியிலும், அதிக ஆற்றலை விரும்புவோர் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், போட்டி அதிகரித்துக் கொண்டிருப்பதால் விற்பனையில் லேசாக தொய்வைச் சந்தித்து வருகின்றது. இதன் விளைவாகவே உலக அளவில் லட்சக் கணக்கில் வாகனங்கள் விற்பனையாகமல் தேக்கமடைந்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2024, 11:50 [IST]
English summary
Ktm faces a crisis with 2 65 lakh unsold motorcycles due to poor management decisions
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+