விலையை பார்த்த பிறகு எல்லாரும் கதற போறாங்க! இந்தியாவில் இந்த பைக்குகளை வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்களா?
கேடிஎம் (KTM) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் பிரபலமான ஆஸ்திரிய பைக் நிறுவனமான கேடிஎம் இந்தியாவில் அதன் நெட்வொர்க்கை விரிவுப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகவே தற்போது புதிய பவர்ஃபுல்லான கேடிஎம் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 10 புதிய கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் கேடிஎம் செயல்படுகிறது. அதாவது, பஜாஜின் தொழிற்சாலையில்தான் கேடிஎம் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பவர்ஃபுல்லான கேடிஎம் பைக்குகள் யாவும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இவற்றின் விலைகள் அதிகமாக உள்ளன.

கேடிஎம் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 10 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவையாவன, 1390 சூப்பர் ட்யூக் ஆர், 890 ட்யூக் ஆர், 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ், 890 அட்வென்ச்சர் ஆர், 350 இ.எக்ஸ்.சி-எஃப், 450 எஸ்.எக்ஸ்-எஃப், 250 எஸ்.எக்ஸ்-எஃப், 85 எஸ்.எக்ஸ், 65 எஸ்.எக்ஸ் மற்றும் 50 எஸ்.எக்ஸ் என்பன அந்த 10 பைக்குகள் ஆகும்.
இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.75 லட்சத்தில் இருந்து ரூ.22.96 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் 1390 சூப்பர் ட்யூக் ஆர் மற்றும் 890 ட்யூக் ஆர் உள்ளிட்டவை நாக்டு மோட்டார்சைக்கிள்களாகவும், 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மற்றும் 890 அட்வென்ச்சர் ஆர் உள்ளிட்டவை அட்வென்ச்சர் பைக்குகளாகவும், 350 இ.எக்ஸ்.சி-எஃப் ஆனது ஆஃப்-ரோடு பயணங்களுக்கான எண்டூரோ பைக் ஆகவும் விளங்குகின்றன.

450 எஸ்.எக்ஸ்-எஃப் மற்றும் 250 எஸ்.எக்ஸ்-எஃப் உள்ளிட்டவை மண், சகதி மிகுந்த மோட்டோகிராஸ் போட்டிகளுக்கு ஏற்ற பைக்குகள் ஆகும். கேடிஎம் 85 எஸ்.எக்ஸ், 65 எஸ்.எக்ஸ் மற்றும் 50 எஸ்.எக்ஸ் பைக்குகள் சிறு வயது ரேசர்களுக்கான பைக்குகளுக்காக விளங்குகின்றன. இந்த புதிய விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய நாடு முழுவதும் மொத்தம் 7 நகரங்களில் பிரீமியம் டீலர்ஷிப் ஷோரூம்களை கேடிஎம் கொண்டுள்ளது.
சென்னை, பெங்களூர், புனே, மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா என்பன அந்த 7 நகரங்கள் ஆகும். பைக்குகளுடன், அவற்றிற்கான ஆக்ஸஸரீகளையும் இந்த நகரங்களில் உள்ள கேடிஎம் பிரீமியம் ஷோரூம்களில் பெறலாம். இவ்வாறான பைக்குகளை அறிமுகம் செய்வதுடன், இந்தியாவில் ரேசர்களையும் வளர்த்தெடுப்பதில் கேடிஎம் தீவிரமாக உள்ளது. இதன் ஒருபகுதியாக, பெங்களூரில் மோட்டார்ஸ்போர்ட் பயிற்சி மையம் உள்ளது.

இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் நுழைந்த கேடிஎம் ஆரம்பத்தில் 200சிசி மற்றும் 390சிசி பைக்குகளை அறிமுகம் செய்தது. பஜாஜ் ஆட்டோவின் உதவியுடன் இந்தியாவில் விரைவாகவே கேடிஎம் அதன் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தியது. அதன்பின், 2020ஆம் ஆண்டில் அட்வென்ச்சர் ரக பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஆரம்பித்த கேடிஎம், தற்போது இ.எக்ஸ்.சி மற்றும் எஸ்.எக்ஸ் போன்ற புதிய ரக பைக்குகளையும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய பவர்ஃபுல்லான பைக்குகளின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய கேடிஎம் ஏஜி நிறுவனத்தின் துணை சிஇஓ காட்ஃபிரைட் நியூமிஸ்டர், "கேடிஎம் மற்றும் பஜாஜ் ஆட்டோ இடையேயான கூட்டணியில் இன்று மற்றொரு மைல்கல்லை குறிக்கிறது. பல பிரிவுகளில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 10 மோட்டார்சைக்கிள்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வெற்றி பெற்ற மிகவும் சில வெளிநாட்டு பைக் நிறுவனங்களுள் கேடிஎம் ஒன்றாகும். நாக்டு பைக்குகள் மூலம் இந்திய இளைஞர்கள் மத்தியில் கவனத்தை பெற்ற கேடிஎம் தற்போது புதிய ரக பைக்குகளையும் நம் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பவர்ஃபுல்லான மற்றும் விலைமிக்க பைக்குகளை இந்தியாவில் கேடிஎம் அறிமுகம் செய்திருப்பது நம் நாட்டு மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டின் வளர்ச்சியை காண்பிக்கிறது.


Click it and Unblock the Notifications









