பிக் பைக்குகளை விற்பனைச் செய்ய தனி ஷோரூம் திறக்கும் பிரபல பிராண்ட்.. முன்னணி இடத்தை பிடிக்க மிக பெரிய முயற்சி

பெரிய எஞ்சின் கொண்ட பைக்குளை விற்பனைச் செய்வதற்கு என தனி ஷோரூமை முன்னணி பிராண்ட் ஒன்று இந்தியாவில் திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேடிஎம் (KTM) நிறுவனமே இந்த சூப்பரான முயற்சியை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கின்றது. ஹோண்டா (Honda) நிறுவனம் பிக் விங் (Big Wing) எனும் பெயரில் பெரிய மற்றும் பிரீமியம் தர டூ-வீலர்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், யமஹா (Yamaha)-வும் ப்ளூ ஸ்கொயர் (Blue Square) எனும் ஷோரூமை தன்னுடைய பிரீமியம் டூ-வீலர்களுக்காக நாட்டில் அமைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழல்நிலையிலேயே ஹோண்டா மற்றும் யமஹா போன்ற பிராண்டுகளின் யுக்தியைப் பயன்படுத்த கேடிஎம்-ம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேடிஎம் இந்த ஷோரூம் அந்நிறுவனத்தின் தற்போது உள்ள வழக்கமான ஷோரூம்களில் இருந்து மேம்பட்டுக் காணப்படும். இந்த ஷோரூம்களில் 990 ட்யூக் மற்றும் 890 அட்வென்ச்சர் போன்ற பெரிய பெரிய எஞ்சின் கொண்ட பைக்குகளையே அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

Ktm 1390 super duke r

நிறுவனத்தின் பெரிய எஞ்சின் கொண்ட மற்றும் பிரீமியம் தர பைக்குகளுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2020 ஆம் ஆண்டில் கேடிஎம்-இன் பிஎஸ்4 (BS) 790 ட்யூக் (790 Duke) பைக்கின் 100 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனையாகின.

நிறுவனத்தின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்ற கேடிஎம் பைக்குகளுடன் ஒப்பிடும்போது இது அதிக விலையைக் கொண்டிருந்தபோதிலும் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின. ​​கேடிஎம் நிறுவனத்தின் பெரிய எஞ்சின் கொண்ட பைக்குகளுக்கான தனி ஷோரூம் திட்டம் நேற்று போடப்பட்டது அல்ல. இந்த திட்டத்தில் அது நீண்ட காலமாக இருந்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தன்னுடைய இந்த பிளான் இப்போதைக்கு மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே போடப்பட்டு இருக்கின்றது. விரைவில் இந்த திட்டத்தின்கீழ் அதன் முதல் விற்பனையகம் நாட்டின் முக்கிய நகரத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பை அல்லது டெல்லியில் இந்த ஷோரூம் முதலில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு பின்னரே சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைக்கு என்ன மாதிரியான மாடல்கள் இந்த ஷோரூம்கள் வாயிலாக விற்பனைச் செய்யப்படும் என்பது தெரியவில்லை. இருப்பினும், 890 அட்வென்ச்சர் மற்றும் 990 டியூக் போன்றவை நிறுவனத்தின் திட்டத்தில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர, 1390 சூப்பர் ட்யூக் ஆர் (1390 Super Duke R) போன்ற மாடலும் இந்தியாவில் இந்த தனித்துவமான ஷோரூம்கள் வாயிலாக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவில் தயாரிக்கப்படாது. அதற்கு பதிலாக அதன் தாய்நாடான ஆஸ்திரியாவில் இருந்து முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், அது சற்று காஸ்ட்லியாகவே இருக்கும். ரூ. 20 லட்சத்திற்கும் அது அறிமுகம் செய்யப்பட்டாலும் சந்தேகப்பட ஒன்றுமில்லை.

இப்போதைய நிலவரப்படி கேடிஎம் 390 ட்யூக், கேடிஎம் 250 ட்யூக், கேடிஎம் 200 ட்யூக், கேடிஎம் 125 ட்யூக், கேடிஎம் ஆர்சி ஜிபி, கேடிஎம் ஆர்சி 390, கேடிஎம் ஆர்சி 200, கேடிஎம் 390 அட்வென்சர், கேடிஎம் 390 அட்வென்சர், கேடிஎம் 390 அட்வென்சர் எக்ஸ் மற்றும் கேடிஎம் 250 அட்வென்சர் ஆகிய பைக் மாடல்களே விற்பனையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவில் இதைவிட பெரிய எஞ்சின் கொண்ட பைக்குகளையே கேடிஎம் அதன் தனி ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. அதற்கும் கேடிஎம் பைக் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2024, 22:11 [IST]
English summary
Ktm to open premium showrooms for big engine bikes in india
மேலும்... #ktm #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+