ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரா இது? படு கவர்ச்சியா மாத்திட்டாங்களே!.. ஆக்டிவா இனி விற்பனையான மாதிரிதான்!
இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான ஸ்கூட்டர் மாடல்களில் டெஸ்டினி 125 (Destini 125)-ம் ஒன்றாக இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலே தற்போது இரண்டு சக்கர வாகன உலகின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கின்றது. இணையத்தில் தற்போது வேற லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கும் டெஸ்டினி 125-இன் படங்கள் வெளியாகி இருப்பதே இதற்கு பின்னால் இருக்கும் காரணமாகும். தற்போது விற்பனையில் இருக்கும் டெஸ்ட்டினியைவிட பலமடங்கு அதிக கவர்ச்சியானதாகவும், மனம் கவரக் கூடியதாகவும் அதனை ஹீரோ அப்டேட் செய்திருக்கின்றது.
அடுத்த தலைமுறை வெர்ஷனாகவே இது சந்தையைக் களம் காண இருக்கின்றது. குறிப்பாக, டிவிஎஸ் என்டார்க் (TVS Ntorq) மற்றும் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)-விற்கு இதன் வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த அளவிற்கே புதிய தலைமுறை டெஸ்டினி 125-யை ஹீரோ தயார் செய்திருக்கின்றது.

Source: Team BHP இது எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. படங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளன. இருப்பினும், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களை வைத்து பார்க்கையில் சீக்கிரமே அடுத்த தலைமுறை டெஸ்ட்டினி 125 விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டே ஹீரோ அதன் புதிய தலைமுறை டெஸ்ட்டினியை இந்திய சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள டெஸ்டினி 125 உடன் ஒப்பிடுகையில், புதிய மாடல் கிளாசிக் மற்றும் ரெட்ரோ தோற்றத்தைப் பெற்றுள்ளது. இது தற்போதைய மாடலின் குடும்ப ஸ்கூட்டர் தோற்றத்தில் இருந்து மிகப் பெரிய மாற்றமாகும். புதிய டெஸ்டினி 125 ஆனது நேர்த்தியான இண்டிகேட்டர்கள் மற்றும் மாறுபட்ட அலங்கார கூறுகளைக் கொண்டிருக்கின்றது.
மேலும், புதிய ஏப்ரானையும் அது கொண்டுள்ளது. இப்போது விற்பனயைில் இருக்கும் டெஸ்டினியில் தடிமனான குரோம் பாகம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது புதிய டெஸ்ட்டினியில் அகற்றப்பட்டு இருக்கின்றது. மேலும், ஹெட்லைட் இப்போது முக்கோண வடிவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்கூட்டருக்கு ஒரு ரெட்ரோ லுக்கை வழங்கக் கூடிய அம்சங்கள் பலவற்றை புதிய டெஸ்ட்டினியில் அதிகம் பார்க்க முடிகின்றது.
இருக்கையானது சிறந்த வடிவமைப்பிற்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, மேலும் பில்லியன் பேக்ரெஸ்ட் அப்படியே இருந்தாலும், கிராப் ரெயில் இப்போது கருப்பு நிறத்தில் உள்ளது. கூடுதலாக, எக்ஸாஸ்ட் ஹீட் ஷீல்டு மற்றும் அலாய் வீல்கள் ஸ்வான்கியர் டிசைனுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, புதிய டெஸ்ட்டினியில் தனித்துவமான நிறம் கொண்ட கண்ணாடிகள், பாடி பேனல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிறத்தை பின் பகுதியிலும் காண முடிகின்றது. இதுதவிர, முதல் முறையாக டெஸ்டினி 125 இன் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வெளிப்புறத்தில் எரிபொருளை நிரப்பும் வாய் பகுதி, யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எக்ஸ்டெக் (XTEC) வாயிலாகவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை அதே 124.6 சிசி சிங்கிள்-சிலிண்டர் மோட்டாரே இடம் பெறும் என கூறப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 9 பிஎச்பி மற்றும் 10.4 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும்.
இது ஓர் ஐ3எஸ் (i3S) ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சிஸ்டம் கொண்ட ஸ்கூட்டரும்கூட. எனவே மைலேஜை இது வாரி வழங்கும் என கூறப்படுகின்றது. எனவே புதிய டெஸ்ட்டினி இந்தியாவின் 125 சிசி ஸ்கூட்டர் பிரிவில் மிகப் பெரிய வீரனாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125), யமஹா ஃபஸ்ஸினோ 125 (Yamaha Fascino 125), டிவிஎஸ் ஜுபிடர் 125 (TVS Jupiter 125) மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் சுஸுகி அக்செஸ் 125 ஃபேஸ்லிஃப்ட் (Suzuki Access 125) ஆகியவற்றிற்கு மிக பெரிய போட்டியாளனாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 125 சிசி திறன் கொண்ட டூ-வீலர்களுக்கு வரவேற்பு பலமடங்கு இரட்டிப்படைந்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் இந்த பிரிவை மையப்படுத்தி தங்களின் புதிய டூ-வீலர்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே ஹீரோ நிறுவனம் அதன் டெஸ்ட்டினியின் புதிய தலைமுறையை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








