130 கிமீ ரேஞ்ஜ் தரும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. ஆகஸ்டு 1ல் இருந்து டெலிவரி தொடங்க போகுது!

லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV) நிறுவனம், இந்தியாவில் எல்எக்ஸ்எஸ் 3.0 (LXS 3.0) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியீடு செய்திருக்கின்றது. எல்எக்ஸ்எஸ் 2.0 (LXS 2.0) மாடலுக்கு இந்தியாவில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்தே இந்த புதிய மாடலை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. இந்த புதுமுக மாடலில் லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் 3 kWh பேட்டரி பேக்கையே வழங்கி இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 130 கிலோ மீட்டர் வரையில் ரேஞ்ஜ் தரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளியீட்டைத் தொடர்ந்து எல்எக்ஸ்எஸ் 3.0 மாடலுக்கு நாடு முழுவதும் புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆனால், டெலிவரி பணிகள் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதலே தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் உள்ள லெக்ட்ரிக்ஸ் இவி விற்பனையகங்கள் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும்.

Lectrix lxs 3 0 scooter

பலதரப்பட்ட சிறப்பம்சங்களை தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே எல்எக்ஸ்எஸ் 3.0 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன்படி, 1200W எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 54 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, வெறும் 10.5 செகண்டுகளிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும்.

இந்த சிறப்பான வேகத்தை எட்டுவதற்கும், ஸ்மூத்தான பயண அனுபவத்தைப் பெறுவதற்கும் ஏற்ப ட்யூப் இல்லா டயரே இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை புதிய எல்எக்ஸ்எஸ் 3.0 தன்னுள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவின் அனைத்து விதமான நிலபரப்பிற்கும் ஏற்ற வாகனமாகவே இதனை தயார் செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரின் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. விரைவில் அதுபற்றிய முக்கிய தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், எல்எக்ஸ்எஸ் 3.0 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய விபரங்களை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலும் எங்களால் காண முடியவில்லை.

இப்போதைய நிலவரப்படி எல்எக்ஸ்எஸ் ஜி2.0 ஹை ஸ்பீடு, எல்எக்ஸ்எஸ் 2.0 ஹை ஸ்பீடு, எல்எக்ஸ்எஸ் சப்ஸ்கிரிப்சன், எல்எக்ஸ்எஸ் ஹை ஸ்பீடு மற்றும் எஸ்எக்ஸ்25 ஸ்லோ ஸ்பீடு ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், இந்த நிறுவனம் சமீபத்திலேயே எல்எக்ஸ்எஸ் 2.0 (LXS 2.0) மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 2.3 KW பேட்டரி பேக் கொண்டதே இந்த மாடல் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 79,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இந்த வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 98 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தும் வகையிலேயே இந்த வாகனத்தை லெக்ட்ரிக்ஸ் இவி வடிவமைத்திருக்கின்றது. இதைப் போலவே தற்போதைய அறிமுகமான லெக்ட்ரிக்ஸ் எல்எக்ஸ்எஸ் 3.0-வையும் வடிவமைத்திருக்கின்றார். அதேவேளையில், இல்லத்தரசிகள் மட்டுமின்றி அலுவலகம் செல்வோருக்கும் உகந்த வாகனமாக இது இருக்கும் என கருதப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லெக்ட்ரிக்ஸ் இவி டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் இருந்து முன்னணி இடத்தை நோக்கி நகரும் விதமாக நிறுவனம் அவ்வப்போது புதிய தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே எல்எக்ஸ்எஸ் 3.0 வெளியீடு அமைந்திருக்கின்றது. இதற்கும் முந்தைய மாடல்களைப் போலவே நல்ல வரவேற்பு இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன காதலர்களிடத்தில் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 17:42 [IST]
English summary
Lectrix ev launches advanced lxs 3 0 electric scooter bookings open
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+