ஒரே ஆளா வந்து 500 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிட்டு போயிட்டாங்க.. ஓலா இ-ஸ்கூட்டரோ, டிவிஎஸ் ஐக்யூப்-போ இல்ல..
இந்தியாவில் அதிகம் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்களும், டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் (TVS iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் மற்றும் பஜாஜ் சேத்தக் (Baja Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருமே விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தின் டாப் 3 மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையாளர்களும் இவர்களே ஆவார்கள். இந்த மாதிரியான சூழலில் ஒரே ஆளாக வந்து இந்த எந்தவொரு முன்னணி நிறுவனமும் இல்லாத ஓர் பிராண்டின் தயாரிப்பை மிக அதிகளவில் வாங்கிச் சென்றிருக்கின்றார்கள்.
எஃப்ஒய்சி டெக் பிரைவேட் லிமிடெட் (FYC Tech Pvt Ltd) எனும் நிறுவனமே லெக்ட்ரிக் இவி நிறவனத்தின் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனத்தை அதிகளவில் வாங்கியிருக்கின்றது. இது ஜம்பர்ஸ் (Jumppers) எனும் பெயரிலும் அறியப்படுகின்றது. இது ஓர் டெலிவரி சேவை நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV) எனும் வளர்ந்து வரும் நிறுவனத்தின் தயாரிப்பையே வாங்கி இருக்கின்றது. சுமார் 500 யூனிட்டுகள் லெக்ட்ரிக்ஸ் இவி-யின் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை ஜம்பர்ஸ் தற்போது வாங்கி இருக்கின்றது. அதிகரித்து வரும் காற்றை மாசுபாட்டைக் குறைக்க மின்சார வாகன பயன்பாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
இந்த சூழலைக் கருத்தில் கொண்டே ஜம்பர்ஸ் தன்னுடைய டெலிவரி சேவையில் முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்தி வருகின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய சேவையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தற்போது 500 புதிய எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களுக்கு அது ஒரே ஆளாக வந்து ஆர்டரை வழங்கி இருக்கின்றது.
இந்த நிறுவனம் ப்ளூ-டார்ட் (Blue-Dart), டிஎச்எல் (DHL), டிடிடிசி (DTDC), ஃப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஸ்மார்ட் ஆர் (Smart-R) ஆகிய நிறுவனங்களுக்காக சேவை ஆற்றி வருகின்றது. ஆமாங்க, இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவையில் ஜம்பர்ஸ் பிராண்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே மிகப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சேவையையே விரைவில் புதிய 500 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வாயிலாக மேலும் விரிவாக்கம் செய்ய இருக்கின்றது. லெக்ட்ரிக்ஸ் இவி-யின் எந்த தயாரிப்பை ஜம்பர்ஸ் கொள்முதல் செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இப்போதைய நிலவரப்படி லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான இ-ஸ்கூட்டர் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
எல்எக்ஸ்எஸ் ஜி2.0 ஹை-ஸ்பீடு (LXS G2.0 - High Speed), எல்எக்ஸ்எஸ் 2.0 ஹை-ஸ்பீடு (LXS 2.0 - High Speed), எல்எக்ஸ்எஸ் 2.0 ஸ்வாப்பிங் (LXS 2.0 - Swapping), எல்எக்ஸ்எஸ் சப்ஸ்கிர்பசன் (LXS - Subscription), எல்எக்ஸ் ஹை-ஸ்பீடு (LXS - High Speed) மற்றும் எஸ்எக்ஸ்25 ஸ்லோ ஸ்பீடு (SX25 - Slow Speed) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களே அவை ஆகும்.
இதில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாடல்களையே ஜம்பர்ஸ் வாங்கி இருக்கும் என நம்பப்படுகின்றது. லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் மின்சார வாகன விற்பனையுடன் சேர்த்து அந்நிறுவனம் பரந்த ஸ்வாப் பேட்டரி பேக் நெட்வொர்க் சேவையையும் இந்தியாவில் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, சார்ஜ் செய்த பேட்டரியை மின்சார வாகனங்களுக்கு வழங்கும் மையங்களையும் இந்தியாவில் செயல்படுத்தி வருகின்றது. ஆகையால், இந்த சேவையை பயன்படுத்தி தடையற்ற டெலிவரி சேவையை ஜம்பர்ஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த பிரமாண்ட கொள்முதல் குறித்து லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனத்தின் பிசினஸ் பிரிவின் தலைவர் பிரீதேஷ் தல்வார் கூறியதாவது, "இந்தியாவில் போக்குவரத்தை மின்மயமாக்குவதே எங்கள் குறிக்கோள். லாஜிஸ்டிக்ஸ் இங்கு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். மேலும், ஜம்பர்களின் பணி, எங்களுடைய நிலைத்தன்மை இலக்குகளுடன் (பசுமை இயக்கம் நோக்கத்து) ஒத்துப்போகிறது. அவர்களுக்கு (ஜம்பர்ஸ்க்கு) ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஜம்பர்ஸ் போன்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தங்களின் ஆதரவை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாக வரும் நாட்களில் மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








