வெறும் ரூ.60,000 என்றால் ரொம்ப ஆச்சிரியமா இருக்கு! மணிக்கு 65கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது!!

லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV), இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று. மார்க்கெட்டில் நீண்ட வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எண்டுரோ 2.0 மற்றும் எண்டுரோ 3.0 என 2 விதமான வேரியண்ட்களில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எண்டுரோ (NDuro) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவுகள் டிசம்பர் 15 முதல் நாடு முழுவதும் துவங்கப்பட உள்ளன. இந்த ஸ்கூட்டரின் எண்டுரோ 2.0 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,999 ஆகவும், எண்டுரோ 3.0 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

lectrix nduro electric scooter introduced

இது பேட்டரி உடன் இந்த ஸ்கூட்டரின் விலைகள் ஆகும். பேட்டரி இல்லாமல், புதிய லெக்ட்ரிக்ஸ் எண்டுரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் வாங்குவோருக்கு பேட்டரி குத்தகை முறையில் வழங்கப்படும். ஒவ்வொரு முறை சார்ஜ் காலியான பின்பு அதற்கான கட்டணத்தை செலுத்தி பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.

வளைவான முன்பக்கத்துடன் ஸ்போர்டியான தோற்றத்தை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது. ஸ்கூட்டரின் முன்பக்கத்திற்கு மத்தியில் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிரைவர் கால் வைக்கும் பகுதிக்கு கீழே இரு கலர் ஆப்ஷன்களிலும் சிவப்பு நிறத்தில் கம்பி பொருத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு என்ன என்பது தெரியவில்லை.

எங்களுக்கு தெரிந்தவரையில், சும்மா அழகிற்காக மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கலாம். ஸ்கூட்டர் கீழே விழுந்தால், இரு பக்கங்களிலும் இருக்கும் கம்பி பாதிப்பை தடுக்கும். புதிய எண்டுரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.3kWh மற்றும் 3.0kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 2.3kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 90கிமீ தொலைவிற்கும், 3.0kWh பேட்டரியில் 117கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என லெக்ட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அதிகப்பட்சமாக மணிக்கு 65கிமீ வேகத்தில் இயங்கக்கூடியவை. எண்டுரோ 2.0 வேரியண்ட்டில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 5.1 வினாடிகளிலும், எண்டுரோ 3.0 வேரியண்ட்டில் 5.5 வினாடிகளிலும் எட்டிவிடலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ட்யூயல்-ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள 5-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையை ப்ளூடூத் உதவி உடன் மொபைல் போன் உடன் இணைத்துக் கொள்ளலாம். இதுமட்டுமின்றி, ஹில் ஹோல்டு வசதி, செக்யூர் மோட், சைடு-ஸ்டாண்ட் கட் ஆஃப் & அலார்ட் வசதி, SOS, ரிவர்ஸில் இயங்கும் வசதி உள்ளிட்டவற்றையும் லெக்ட்ரிக்ஸ் எண்டுரோ ஸ்கூட்டர் கொண்டுள்ளது.

இருக்கைக்கு அடியில் 42 லிட்டர்கள் கொள்ளளவில் இடவசதி, யுஎஸ்பி சார்ஜிங் வசதி, மொபைல் போன் ஹோல்டர், கவர்களை மாட்ட ஹேண்டில்பாருக்கு கீழ் கொக்கி மற்றும் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் லெக்ட்ரிக்ஸ் எண்டுரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. 3 வருட/ 36,000கிமீ-க்கான உத்தரவாதத்தை இந்த ஸ்கூட்டரில் லெக்ட்ரிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்ட்ரிக்ஸ் ஆனது இன்னமும் இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவே உள்ளது. அதாவது, இந்த நிறுவனத்திற்கு சில நகரங்களில் மட்டுமே ஷோரூம்கள் உள்ளன. இதனால், புதிய எண்டுரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்கள், முதலில் உங்களது இருப்பிடத்திற்கு அருகே எவ்வளவு தொலைவில் இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்யும் ஷோரூம் உள்ளது என்பதை பார்க்கவும். ஏனெனில், வாங்கியதற்கு பின் சர்வீஸ் செய்ய ஸ்கூட்டரை ஷோரூமுக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2024, 21:34 [IST]
English summary
Lectrix nduro electric scooter introduced in india check price features all details here
மேலும்... #electric scooter #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+