ஷோரூம்களுக்கு வர தொடங்கியது ஏத்தர் 450அபெக்ஸ்! ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோக்கு போறமாதிரி எல்லாரும் கிளம்ப போறாங்க!

இந்தியாவில், இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் வாகன உற்பத்தி பணிகளைத் தொடங்கி வெற்றிகரமாக பத்தாண்டுகள் ஆகிவிட்டன. மேலும், இந்தியர்களின் ஃபேவரிட் பிராண்டுகளில் ஒன்றாகவும் மாறிவிட்டது.

இத்தகைய இலக்கை தொட்டதை முன்னிட்டு அந்நிறுவனம் இந்தியாவில் ஓர் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. 450 அபெக்ஸ் (450 Apex) மாடலே அதுவாகும். சில தினங்களுக்கு முன்னரே இந்த வாகனத்தை ஏத்தர் எனெர்ஜி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்தது.

Ather 450 apex starts arriving at dealers

இதைத்தொடர்ந்து புக்கிங் பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த நிலையிலேயே ஏத்தர் 450 அபெக்ஸ் ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏத்தர் 450 அபெக்ஸ் ஷோரூம்களில் கெத்தாகக் காட்சியளிக்கும் படங்களும் வெளியாகி உள்ளன. தற்போது 50 ஷோரூம்களில் இந்த வாகனத்தின் தரிசனம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

விரைவில் இதன் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருக்கின்றன. மார்ச் மாத முதல் வாரத்திலேயே இதன் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக நிறுவனத்தின் தாயகமான பெங்களூரு, புனே மற்றும் கோவா ஆகிய நகரங்களிலேயே டெலிவரி தொடங்கப்பட இருக்கின்றது. ஏத்தர் 450 அபெக்ஸ் ஓர் சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

இதனாலேயே நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் கொஞ்சம் ஸ்பெஷலான ஆளாக (தயாரிப்பாக) இது காட்சியளிக்கின்றது. வெளிப்புற தோற்றத்திலும் சரி, திறன் வெளிப்பாட்டிலும் அனைத்திலும் இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே உள்ளது. உதாரணமாக, 450 அபெக்ஸில் உட்பக்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும் வகையில் கண்ணாடி பாடி பேனல்களே பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இது அவ்வளவு எளிதில் நொறுங்கிவிடாது. இதேபோல், ஆரஞ்சு மற்றும் நீல வண்ண வேலைப்பாட்டாலும் இது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. கலர் ஸ்கீம் அந்த வாகனத்திற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி நிறுவனத்தின் உயர்நிலை தயாரிப்பான 450எக்ஸ் மாடலையே மிஞ்சும் அளவிற்கு பல்வேறு சிறப்பு திறன்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 7 kW பவரை வெளியேற்றும் வகையில் இதன் மின்சார மோட்டார் ட்யூன் செய்யப்பட்டு இருக்கின்றது. இது 9.3 பிஎச்பி பவருக்கு இணையான திறன் ஆகும். அதேவேளையில், நிறுவனத்தின் உயர்நிலை மாடலாக காட்சியளிக்கும் 450எக்ஸ் 8.5 பிஎச்பி பவரை மட்டுமே வெளியேற்றும்.

அதாவது, இதன் 6.4 kW திறனை மட்டுமே அது வெளியேற்றும். 450அபெக்ஸில் பயன்படுத்தப்பட்டு இருப்பது பிஎம்எஸ் வகை மோட்டார் ஆகும். இதேபோல், திறன் வெளிப்பாட்டிலும் சிறந்ததாகவே 450 அபெக்ஸ் காட்சியளிக்கின்றது. இது வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனை கொண்டிருக்கின்றது.

இத்துடன் மற்றுமொரு சிறப்பம்சமாக புதிய வார்ப் பிளஸ் மோட், ஸ்பெஷல் கிராஃபிக்ஸ் ஸ்கிரீனிங் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ரைடிங் அனுபவத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்ற உதவியாக இருக்கும். மேலும், மேஜிக் ட்விஸ்ட் எனும் வசதியும் 450 அபெக்ஸ்-இல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் புதிய அட்வான்ஸ்டு ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகும். இதன் முக்கிய வேலையே நெகட்டீவ் த்ரோட்டிலை வழங்குவதாகும். ஏத்தர் எனெர்ஜி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓர் முழு சார்ஜில் 157 கிமீ ரேஞ்ஜை தரும் வகையில் வடிவமைத்திருக்கின்றது. இதற்காக 3.7 kWh பேட்டரி பேக் அதில் பயன்படுத்தி இருக்கின்றது.

ஏத்தர் 450எக்ஸ் ஓர் முழு சார்ஜில் 150 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை தாங்கியதாகவே ஏத்தர் 450 அபெக்ஸ் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதால் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஏத்தர் 450 அபெக்ஸ் 8 முதல் 9 மாதங்கள் வரை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பது தெரிகின்றது. மேலும், புக்கிங்குகளும் சில வாரங்களுக்கு மட்டுமே நடைபெறும் என கூறப்படுகின்றது. இதுதவிர, 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு ஹெல்மெட்டையும் அது வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 11:26 [IST]
English summary
Limited edition ather 450 apex is now at the experience center deliveries begin soon
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+