என்னது இந்த பைக்கோட விலை இவ்ளோ அதிகமா! அவுட்-ஆஃப் சிட்டில இல்ல சென்னைக்கு உள்ளயே ஒரு அபார்ட்மென்ட வாங்கிடலாம்!

இந்தியாவில் சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் விலையில் பைக் மாடல்கள் விற்கப்படுகின்றன. நாங்கள் இங்கே சொகுசு கார்கள் என குறிப்பிடுவது டொயோட்டா இன்னோவா கார் மாடலையோ, ஹூண்டாய் கிரெட்டா கார் மாடலையோ அல்ல. பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளையே நாங்கள் இங்கே குறிப்பிடுகின்றோம்.

ஆமாங்க, இந்த லக்சூரி கார் தயாரிப்பாளரகளின் சில தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் விலையில் இந்தியாவில் சில சூப்பர் பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை எவை என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக அதிக விலைக் கொண்ட டாப் 5 சூப்பர் பைக்குகளின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Kawasaki ninja h2r

கவாஸாகி நிஞ்சா எச்2ஆர் (Kawasaki Ninja H2R): இந்தியாவில் விற்பனையில் இருப்பதிலேயே மிக மிக விலை உயர்ந்த பைக் மாடல் எதுவென்று அது கவாஸாகியின் இந்த தயாரிப்புதான். ரூ. 79.90 லட்சம் என்கிற உச்சபட்ச விலையில் இந்த பைக் விற்கப்படுகின்றது. இது மிகவும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பைக் மாடல் ஆகும்.

இதனால்தான் இதன் விலை நம்ப முடியாத அளவிற்கு மிகவும் அதிகமாக உள்ளது. அதேவேளையில், இந்த அளவிற்கு அதிக தொகையைக் கொடுத்து இந்த பைக்கை வாங்கினாலும், பொதுவெளி சாலையில் வைத்து இந்த பைக்கை ஓட்ட முடியாது. இந்த பைக்கை பொதுவெளி சாலையில் வைத்து ஓட்ட அனுமதியில்லை.

ரேஸ் டிராக்கில் வைத்து மட்டுமே இதை ஓட்டிக் கொள்ள வேண்டும். இந்த பைக்கில் 998 சிசி திறனை வெளியேற்றும் இன்லைன் 4 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 305.7 பிஎச்பி மற்றும் 165 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த பைக்கில் சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக 43மிமீ அளவுள்ள அப்சைடு டவுன் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் ஓஹ்லின்ஸ் டிடிஎக்ஸ்36 கேஸ்-சார்ஜட் மேனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறந்த பிரேக்கிங் வசதிக்காக 330 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 250 மிமீ அளவுள்ள டிஸ்க் பின் பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கின்றது.

டுகாட்டி பனிகேல் வி4ஆர் (Ducati Panigale V4 R): கவாஸாகி நிஞ்சா இசட்2ஆர் பைக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிக மிக உயரிய விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்காக டுகாட்டி பனிகேல் வி4ஆர் இருக்கின்றது. ஆனால், இந்த பைக்கை பொதுவெளியில் வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பைக்கில் 998 சிசி வி4 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் 221 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த பைக்கிலும் சொகுசான ரைடு அனுபவத்தை பெறுவதற்கான அம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. உலக தரம் வாய்ந்த எலெக்ட்ரானிக் கருவிகளிலும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பைக்கின் விலை ரூ. 70 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் (BMW M 1000 RR): இந்தியாவில் அதிக விலையில் விற்கப்படும் பைக்குகளின் வரிசையில் இந்த பைக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் விலை ரூ. 49 லட்சம் ஆகும். இந்த பைக்கில் 209 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்ட 999 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவும், ரேஸ் செய்வதற்கு ஏற்ற பைக் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கின் உருவாக்கத்தில் பிளெத்தோரா கார்பன் ஃபைபர் (Plethora Of Carbon Fiber) பாகங்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. பைக்கின் எடையைக் குறைக்கும் பொருட்டே இந்த பிரீமியம் பாகத்தை பிஎம்டபிள்யூ பயன்படுத்தி இருக்கின்றது. இது எடை குறைவானதாக இருந்தாலும் அதிக உறுதியானவை ஆகும்.

ஹார்லி டேவிட்சன் ரோட் கிளைட் ஸ்பெஷல் (Harley-Davidson Road Glide Special): இந்த பைக் இந்தியாவில் ரூ. 41.79 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. ஆகையால், இந்த பட்டியலில் ஹார்லி டேவிட்சன் ரோட் கிளைட் ஸ்பெஷல் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த பைக்கில் 1,868 சிசி வி-ட்வின் மோட்டாரே பன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 92.5 பிஎச்பி மற்றும் 158 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. லாங் டிரைவ்விற்கு ஏற்ற பைக் மாடல் இதுவாகும். எவ்வளவு தூரம் பயணித்தாலும் மிகப் பெரிய அளவில் களைப்பே இந்த பைக்கில் தெரியாது. குறிப்பாக, ரைடை தொடர்ந்து மேற்கொள்ளவே இது தூண்டும்.

ஹோண்டா கோல்டுவிங் டூர் (Honda Goldwing Tour): இந்த பட்டியலில் கடைசியாக நாம் பார்க்கும் அதிக விலைக் கொண்ட பைக் மாடல் இதுவே ஆகும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 39.20 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. 1,833 சிசி ஃபிளாட் சிக்ஸ் எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதிகம் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த பைக் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த பைக்குகளின் விலையில் சென்னையில் ஒதுக்குப்புறத்தில் அல்ல சென்னைக்கு உள்ளேயே சின்னத ஒரு நிலத்தையோ அல்லது செகண்ட் ஹேண்ட் ஃபிளாட்டையோ வாங்கிவிடலாம். இந்த அளவிற்கே அதிக விலையில் மேலே உள்ள பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த பைக்குகளுக்கு இந்தியாவில் உள்ள பணக்கார இளைஞர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 12:16 [IST]
English summary
List of most expensive bikes for sale in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+