இந்தியாவில் அதிகம் டூ-வீலர்களை ஏற்றுமதி செய்யும் பிராண்ட் எது தெரியுமா? ஹீரோவோ-ஹோண்டாவோ கிடையாதுங்க!

இந்தியா இரண்டு சக்கர வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆட்டோமொபைல் பிரிவில் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையே மிகப் பெரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் பிஎஸ்ஏ மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்கள் தற்போது மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதித்து இருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் நல்ல விற்பனை வளர்ச்சியை இந்தியாவில் உள்ள இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் காண்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதிலும் அவர்கள் நல்ல வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சான்றாகவே சென்ற 2024 பிப்ரவரி மாதம் அமைந்து இருக்கின்றது.

Top 5 two wheeler brands exported

இந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து அதிக அளவில் டூ-வீலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் டூ-வீலர்களை வெளிநாட்டு சந்தைக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. அந்த முன்னணி பிராண்டுகள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பஜாஜ் (Bajaj): இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் டூ-வீலர்களை ஏற்றுமதி செய்யும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் பஜாஜ்-ஜே முதல் இடத்தில் இருக்கின்றது. இந்திய நிறுவனம் இந்த இடத்தைப் பிடித்திருப்பது நாட்டிற்கே பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் அதன் தயாரிப்புகளை மட்டுமின்றி கேடிஎம் இரண்டு சக்கர வாகனங்களையும் இந்தியாவில் இருந்தே தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,24,157 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 7.9 சதவீதம் அதிகம் ஆகும். இந்த மாபெரும் வளர்ச்சியை வைத்து பார்க்கையில் இந்தியாவைப் போலவே உலக நாடுகளிலும் நம் இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது.

டிவிஎஸ் (TVS): இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தையும் நமது இந்திய நிறுவனமே பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்காக சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் 90,308 யூனிட்டு வாாகனங்களை ஏற்றுமதி செய்திருக்கின்றது. 2023 பிப்ரவரியில் இதே நிறுவனம் 45,624 யூனிட்டுகளை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா (Honda): இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்த டூ-வீலர் நிறுவனங்களின் பட்டியலில் ஹோண்டா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனம் 44,744 யூனிட்டுகள் இரண்டு சக்கர வாகனங்களை இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது. இது 2023 பிப்ரவரியைக் காட்டிலும் 122 சதவீதம் அதிகம் ஆகும்.

ஹீரோ (Hero): யமஹாவை அடுத்து நான்காவது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 23 ஆயிரத்து 148 யூனிட்டுகள் டூ-வீலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதன் வாயிலாக ஹீரோ நிறுவனத்திற்கு இந்தியாவில் கிடைப்பதைப் போலவே வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைப்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும், இது 2023 பிப்ரவரியைக் காட்டிலும் 90.6 சதவீதம் அதிக ஏற்றுமதி எண்ணிக்கை ஆகும். ஆகையால், ஹீரோவின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளில் கிடைக்கும் வரவேற்பு சென்ற மாதத்தில் இரட்டிப்பாகி இருக்கின்றது என்பதையும் நம்மால் உணர முடிகின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனங்களின் தயாரிப்பிலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சிறந்த பிராண்டாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

யமஹா (Yamaha): வெளிநாடுகளுக்கு அதிகம் இரண்டு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் கடைசி இடத்தையே இந்த நிறுவனம் பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் 21,873 யூனிட் டூ-வீலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது. இது 2023 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 39.3 சதவீதம் அதிக ஏற்றுமதி எண்ணிக்கை ஆகும்.

யமஹா நிறுவனம் இந்தியாவில் சிபியூ வாயிலாக சில தயாரிப்புகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்குகின்றது. அதேவேளையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் சில வாகனங்கள் வெளிநாடுகள் சிலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. வரும் நாட்களிலும் யமஹா இதேபோல் முதல் இடத்தையே பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இந்தியாவிற்கே பெருமிதம் சேர்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, வெளிநாட்டவர்கள் இந்திய தயாரிப்பு வாகனங்களை அதிகம் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பதும் நம்மை பெருமை அடையச் செய்திருக்கின்றது. வரும் நாட்களில் இந்திய தயாரிப்புகளுக்கு வரவேற்பு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 12:42 [IST]
English summary
List of top exporting two wheeler brands in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+