கார்களையே என்ன சேதின்னு கேக்க போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இவ்ளோதானா! எல்லாரும் வரிசைல நிக்க போறாங்க!
இந்திய டூவீலர் சந்தையில் பிரபலமாக உள்ள நிறுவனங்களில் ஒன்று எல்எம்எல் (LML). இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. எல்எம்எல் ஸ்டார் (LML Star) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வமான 'ஃபர்ஸ்ட் லுக் டிசைன்' தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்எம்எல் நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 3 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றாகவும். இந்திய சந்தையில் இன்னும் ஒரு சில வாரங்களில் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதை தொடர்ந்து மற்ற 2 எலெக்ட்ரிக் டூவீலர்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவை எல்எம்எல் மூன்ஷாட் (LML Moonshot) மற்றும் எல்எம்எல் ஓரியன் (LML Orion) என்ற பெயர்களில் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளன. தற்போது எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய சில முக்கியமான தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன.
எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், கார்களில் இருப்பதை போன்ற ஃபாலோ மீ ஹோம் (Follow Me Home) அல்லது கைடு மீ ஹோம் (Guide Me Home) என அழைக்கப்படும் அம்சத்துடன், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் வயர்லெஸ் சார்ஜர், டிஜிட்டல் ஸ்க்ரீன், ஆம்பியண்ட் லைட்டிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் ஆகிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். மேலும் எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ரிவர்ஸ் மோட் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கார்களை போன்று, எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும், ரிவர்ஸில் இயக்கி கொள்ள முடியும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், ஒரு முறை முழுமையாக நிரப்பினால், சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய கூடிய பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம். இது நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச் (Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், கழற்றி மாட்டி கொள்ள கூடிய வகையிலான பேட்டரி வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக நீங்கள் நீண்ட நேரம் காத்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே சார்ஜ் நிரப்பி வைத்துள்ள பேட்டரியை மாற்றி கொண்டு, தொடர்ந்து பயணம் செய்யலாம்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 1 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கலாம்.
ஏனெனில் போட்டி மாடல்களில் இல்லாத நிறைய அதிநவீன வசதிகளை எல்லாம், எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோல் செலவை சேமிக்க வேண்டும் என்பதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், எல்எம்எல் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்காக காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications








