பஜாஜ் சிஎன்ஜி பைக்கை தூர விடுங்க! தமிழ்நாடு நிறுவனம் எல்பிஜி பைக்கை தயாரிக்குது! விலை இவ்வளவு கம்மியா?
பஜாஜ் நிறுவனம் முதன்முறையாக சிஎன்ஜி பைக் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்று டூவீலர்களில் எல்பிஜி கிட்களை பொருத்துவதற்கான அனுமதியை வாங்கி உள்ளது. சிஎன்ஜி பைக்குகளுக்கு போட்டியாக எல்பிஜி பைக்குகளும் இனி தமிழகத்தில் ஓட உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. தற்போது லிட்டருக்கு ரூபாய் 100 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை கட்டுபடியாகாமல் பலர் மாற்று வழியை கண்டுபிடிக்க துவங்கி விட்டார்கள். இதனால் புதிதாக ஸ்கூட்டர் வாங்கும் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். இதன் மூலம் தினம்தோறும் பெட்ரோலுக்காக செலவு செய்யும் தொகையை மிச்சப்படுத்த முடியும் என கருதி இந்த முடிவை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களிடம் பெட்ரோல்க்கு மாற்றாக வேறு எரிபொருள் இயங்கும் வாகனங்கள் தேவை என்ற விஷயத்தை புரிந்து கொண்ட பஜாஜ் நிறுவனம் தற்போது குறைந்த விலையில் சிஎன்ஜி பைக்குகளை தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளது. அடுத்த ஒரு சில வாரங்களில் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜி வாயுவை செலுத்துவதன் மூலம் பைக்கை இயக்க முடியும்.
இந்த சிஎன்ஜி பைக் மீது மக்கள் பலர் ஆர்வமாக காத்திருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த கேஆர் ஃப்யூயல் என்ற நிறுவனம் முதல் நிறுவனமாக டூவீலரில் எல்பிஜி கிட்டுகளை பொருத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. அதன்படி சிஎன்ஜிக்கு போட்டியாக இந்நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் பிஎஸ்4 ரக ஸ்கூட்டர்களில் எல்பிஜி திட்டங்களை பொருத்துகிறது.

அதன்படி இப்படியாக பிஎஸ்4 வாகனங்களில் எல்பிஜி கட்டுகளை பொருத்துவதன் மூலம் மாசு வெளியீடு வெகு குறைவாக இருக்கிறது. அதே நேரம் எரிபொருளுக்கான செலவும் குறைவாக இருக்கிறது. பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி பைக்கை எதற்காக தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர நினைக்கிறதோ அதே நோக்கத்திற்காக தான் இந்த எல்பிஜி கிட்களையும் ஏற்கனவே உள்ள பெட்ரோல் ஸ்கூட்டர்களில் பொருத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் செலவை பொருத்தவரை எல்பிஜி கிட்களை ஒரு ஸ்கூட்டரில் பொருத்த வேண்டும் என்றால் கிட்டிற்காக ரூபாய் 9500 முதல் ரூபாய் 10,500 வரை செலவு செய்ய வேண்டியது இருக்கும். இதற்கான ஃபிட்டிங் சார்ஜ் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஒருவர் ரூபாய் 15,500 செலவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதை செலவு செய்தால் ஸ்கூட்டர்களில் பெட்ரோலுக்கு பதிலாக எல்பிஜி கேஸ் மூலம் பயணிக்க முடியும்.
கேஆர் ஃப்யூயல் நிறுவனம் இந்த எல்பிஜி கிட்களை திருச்சியில் உள்ள தனது ஆலையில் வைத்து தயாரிக்கிறது. இதில் 5 லிட்டர் டேங்க், இசியூ வயரிங், மற்றும் இன்ஜெக்டர் ஆகிய கருவிகள் உள்ளன. அனைத்து கருவிகளையும் இந்நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியா முழுவதும் இயங்கி வரும் பெட்ரோல் ஸ்கூட்டர்களை சிஎன்ஜி ஸ்கூட்டர்களாக மாற்றும் பணியை இந்நிறுவனம் விரைவில் துவங்க உள்ளது.
முதற்கட்டமாக 8000 கிட்களை அந்நிறுவனம் தயாரித்து விநியோகத்திற்கு அனுப்பி உள்ளது. அந்நிறுவனம் ஏற்கனவே தமிழகத்தில் எல்பிஜி ஸ்டேஷன்கள் ரெட்ரோஃபிட்மென்ட் சென்டர்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் வெளிமாநிலங்களிலும் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கலாம். இதனால் இந்தியா முழுவதும் விரைவில் இந்த சேவை கிடைக்கப்பெறும்.
ஸ்கூட்டர்களில் ரெட்ரோஃபிட்மென்ட்களை பொருத்துவது இது ஒன்றும் முதல் முறை அல்ல கடந்த 2017ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனம் சிஎன்ஜி கிட்களை ஸ்கூட்டரில் பொருத்தியுள்ளது. தற்போது பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் இறங்கும் இயங்கும் வகையிலான டூவீலர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் மத்தியில் பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள் குறித்த சிந்தனை வந்துள்ள நிலையில், தற்போது சிஎன்ஜிக்கு மாற்றாக எல்பிஜி மூலம் இயங்கும் கன்வெர்ஷன் கிட்ட தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் ஆங்காங்கே எல்பிஜி கேஸ் ஸ்டேஷன் இருப்பது இதற்கு பெரிய பிளஸ் ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








