எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இல்லாத வீடே இருக்க கூடாது! வெளியானது அதிரடி அறிவிப்பு! பிரச்சாரமே பண்ணாம ஜெயிக்க போறாங்க

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்களும் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

மத்திய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதை விரும்புகின்றன. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை (Price) சற்று அதிகமாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மக்கள் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

Ola Electric Scooters

இதை தவிர்ப்பதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் மத்திய பிரதேச மாநில அரசு (Madhya Pradesh Government) தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அம்மாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) வாங்கும் தொழிலாளர்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு 40 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பதுதான் இதற்கு காரணம். மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சர் மோகன் யாதவ் (Madhya Pradesh Chief Minister Mohan Yadav) இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Komaki Flora Electric Scooter

இதன் மூலம் மத்திய பிரதேச மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என கருதப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும். அத்துடன் எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் (2024 Lok Sabha Election) இது பாஜகவிற்கு (BJP) உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே பாஜக மிகவும் வலுவான ஒரு கட்சிதான். சொல்லப்போனால் மத்திய பிரதேசத்தை பாஜகவின் கோட்டை என வர்ணிக்கலாம். அப்படி இருக்கும்போது இது போன்ற அதிரடி அறிவிப்புகள், அங்கு பாஜகவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் தொழிலாளர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் பண உதவி என்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு அறிவிப்புதான். இதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு தொழிலாளர்கள் ஓரளவிற்கு குறைவான பணத்தை மட்டும் முதலீடு செய்தால் போதுமானது.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் (Petrol Scooters) ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இயக்குவதற்கு (Running Cost) குறைவான செலவுதான் ஆகும். இதுவும் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்க கூடிய ஒன்றாகவே இருக்கும். எனவே மத்திய பிரதேச முதல் அமைச்சர் மோகன் யாதவின் இந்த அறிவிப்பை, அம்மாநில தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2024, 14:52 [IST]
English summary
Madhya pradesh government to provide rs 40000 aid to labourers for purchasing electric scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+