சுற்றுலாக்கு சென்று வந்தத போல இருக்கும்.. அப்படி ஒரு அசத்தலான லுக்.. முதல் முறையாக படங்கள வெளியிட்டிருக்காங்க!
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம், டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கே டஃப் கொடுக்கும் பிராண்டாக உருவெடுத்திருக்கின்றது. மின்சார கார் பிரிவிலேயே இத்தகைய வளர்ச்சியை அது கண்டிருக்கின்றது. டாடா-வின் முன்னணி மின்சார கார் மாடலான நெக்ஸான் இவி (Nexon EV)-யே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்து வந்தநிலையில், அந்த இடத்தை எம்ஜி நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்றே தட்டிப் பறித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட விண்ட்ஸர் இவி (Windsor EV)-யே அது ஆகும்.
இது ஓர் சியூவி (CUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் முதல் மற்றும் ஒரே சியூவி ரக கார் மாடல் இதுவே ஆகும். இதன் காரணத்தினாலும், விலை குறைவு என்கிற காரணத்தினாலும் இதற்கு அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக தன் வசம் வளைத்துப் போடும் நோக்கில் எம்ஜி நிறுவனம் மற்றுமொரு புதுமுக கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சைபர்ஸ்டர் (Cyberster), எனும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான லுக் மற்றும் திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட கார் மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
ஜனவரி மாதத்திலேயே இது அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது எம்ஜி நிறுவனம் சைபர்ஸ்டர் காரின் படங்களை முதல் முறையாக இந்தியாவில் வெளியிட்டு இருக்கின்றது. இதுவும் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே ஆகும். இதனை பல்வேறு சிறப்பு வசதிகளைத் தாங்கிய காராக எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
அந்தவகையில், இந்தியாவின் முதல் சிசர் வகை கதவுகளைக் கொண்ட மின்சார காராக இதனை எம்ஜி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஆமாங்க, இந்த வசதிக் கொண்ட ஒரு இ-கார் கூட இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. கதவுகளைக் கொண்டிருப்பதில் மட்டுமல்ல லக்சூரியான டிராவல் அனுபவத்தை வழங்குவதிலும் இது தலை சிறந்த வாகனமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது வெளியாகி இருக்கும் படங்களும் இருக்கின்றன. சைபர்ஸ்டர் காரின் கதவை திறக்கக் கூட பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒரே ஒரு பட்டனை தட்டினாலே போதும் ஆட்டோமேட்டிக்காகவே திறக்கும். இதற்கான பட்டன்கள் சென்டர் கன்சோல், ஸ்மார்ட் சாவி மற்றும் அனைத்து டோர்களிலும் வழங்கப்பட்டு இருக்கும்.
இந்த பட்டன்களைத் தட்டினால் வெறும் 5 செகண்டுகளில் அந்த டோர் திறந்துவிடும். ஆகையால், மிக சுலபமாக காரில் ஏற-இறங்க முடியும். இந்த டோர்களில் ரேடார் சென்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஆள் நுழைவதற்கு முன்னரே மூடுவதை தவிர்ப்பதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு சுவாரஷ்யமான வசதிகளையும், சிறப்பம்சங்களையும் இந்த கார் தாங்கியிருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும் பணக்காரர்களை கட்டாயம் இந்த கார் மாடல் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப அதன் தோற்றமும் இருக்கின்றது. மேலும், இந்த காரை பிரத்யேகமான ஷோரூம் வாயிலாக மட்டுமே எம்ஜி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கார்களுக்கு என தனி 'எம்ஜி செலக்ட்' எனும் ஷோரூம் நெட்வொர்க்கை உருவாக்க இருக்கின்றது.
இந்த ஷோரூம் ஆரம்பத்தில் இந்தியாவின் முக்கியமான 12 நகரங்களில் மட்டுமே முதலில் அமைக்கப்படும். இதற்கு பின்னரே அடுத்தடுத்த நகரங்களிலும் அமைக்கப்பட இருப்பதாக எம்ஜி தெரிவித்திருக்கின்றது. மேலும், செலக்ட் ஷோரூம் வாயிலாக விற்பனைக்கு வர இருக்கும் முதல் எம்ஜி கார் மாடல் இந்த சைபர்ஸ்டரே ஆகும்.


Click it and Unblock the Notifications








