நாளை விற்பனைக்கு அறிமுகமாகிறது பஜாஜ் பல்சர் என்எஸ்400.. இருப்பதிலேயே இதுதான் அதிக திறனை வெளிப்படுத்துமாம்..
இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக பஜாஜ் பல்சர் என்எஸ் 400 (Bajaj Pulsar NS400) பைக் மாடல் இருக்கின்றது. குறிப்பாக, பல்சர் பைக் காதலர்கள் இந்த பைக்கின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு உள்ளனர். இந்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக நாளைய தினம் அந்த பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இதற்கான அனைத்து பணிகளையும் பஜாஜ் தற்போது ஏற்பாடு செய்துவிட்டது. நாளைய தினம் இந்த பைக்கின் முக்கிய விபரங்கள் பலவற்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, விலை போன்ற முக்கிய விபரங்கள் நாளேயே எதிர்பார்கப்படுகிறது. புதிய பல்சர் என்எஸ் 400, தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற பல்சர் பைக் மாடல்களைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்போதைய நிலவரப்படி பல்சர் பைக் வரிசையில் 125 சிசி முதல் 250 சிசி வரையிலான திறன் கொண்ட பைக்குகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே விரைவில் புதிய பல்சர் 400 இணைக்கப்பட இருக்கின்றது. இதில் 373.2 சிசி திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது.
எனவே தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து பல்சர் மாடல்களைக் காட்டிலும் மிக சிறந்த மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய பல்சர் பைக்காக பல்சர் என்எஸ் 400 பைக் இருக்கும் என தெரிகின்றது. இந்த புதிய பைக்கை அதன் பிரபல பல்சர் என்எஸ் சீரிஸ்களை தழுவியே பஜாஜ் உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது
இந்த பைக் எப்படி முரட்டுத் தனமான திறனை வெளியேற்றுமோ, அதேபோல், லுக்கிலும் மிகவும் முரட்டுத் தனமானதாகக் காட்சியளிக்கின்றது. மிகவும் கட்டுமஸ்தான பாடி பேனல்களைக் கொண்டே இந்த பைக்கை பஜாஜ் அலங்கரித்திருக்கின்றது. அத்துடன், மூன்று விதமான நிறங்களைக் கொண்டும் இந்த பைக்கை பஜாஜ் அலங்கரித்துள்ளது.
ஆகையால், இது இன்னும் அழகானதாகவும் கவர்ச்சியானதாகவும் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் இன்னும் பல அம்சங்களும் என்எஸ் மாடலை தழுவியதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. அந்தவகையில், 41 மிமீ அளவுள்ள அல்லது 43 மிமீ அளவுள்ள யுஎஸ்டி ஃபோர்க் தங்க நிறத்துடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், இதன் பின் பக்கத்தில் ப்ரீ-லோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர டூயல் சேனல் ஏபிஎஸ்ஸும் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, எல்இடி புரஜெக்டர் வகை ஹெட்லைட், மற்றும் எல்இடி டிஆர்எல்களும் என்எஸ் 400 பைக்கில் இடம் பெற இருக்கின்றன.
இந்த பைக்கின் அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ஸ்பிளிட் வகை இருக்கை, ஷார்ப்பான தோள்பட்டைக் கொண்ட ஃப்யூவல் டேங்க், ஸ்பிளிட் கிராப் ரெயில், டிராக்சன் கன்ட்ரோல், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் டயர் ஹக்கர்கள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற இருக்கின்றன.
பல்சர் வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்ற மாடல்களுக்கு கிடைப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இது அதிக திறனை வெளியேற்றும் என்பதால், அதிக திறனை வெளியேற்றும் இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய ஈர்ப்பை இந்த பைக் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பல்சர் என்எஸ் 400 பைக்கின் வருகை கேடிஎம் ட்யூக் மற்றும் ஹீரோ கரிஷ்மா போன்ற பைக் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். ஆகையால், இதன் வருகையால் கேடிஎம் மற்றும் ஹீரோ போன்ற பிராண்டுகளுக்கு மிகப் பெரிய தலைவலியான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








