இதில் ஒன்றை வாங்குவதற்கு காரை வாங்கிவிடலாம்!! விலையை பார்த்தால் மயக்கமே வந்துவிடும்!

பைக்குகளை போல ஸ்கூட்டர்களுக்கும் உலகளவில் பெரிய மார்க்கெட் உள்ளது. கியர்களை மேனுவலாக மாற்ற வேண்டிய தேவையில்லை, சவுகரியமான ரைடிங் பொசிஷன், பொருட்களை எடுத்து செல்வதற்கு போதுமான இடவசதி உள்ளிட்ட காரணங்களினால் பலர் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்குகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் வசிப்பவர்களின் சாய்ஸ் ஸ்கூட்டர்களாகவே உள்ளது. பைக்குகள் அளவிற்கு ஸ்கூட்டர்களில் மெக்கானிக்கல் பாகங்கள் அதிகம் கிடையாது. இதனால், ஸ்கூட்டர்களின் விலைகள் குறைவாக இருக்கும் என உங்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மையில் அப்படி இல்லை.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுவதினாலேயே பைக்குகளுக்கு இணையான விலையில் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், ஒரு சில ஸ்கூட்டர்கள் உங்களால் எதிர்பார்க்கவே முடியாத அளவிற்கு அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வாறு மார்க்கெட்டில் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களுள் சிலவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

most costliest scooters in india

வெஸ்பா 946 டிராகன் (Vespa 946 Dragon): இத்தாலி நாட்டை சேர்ந்த வெஸ்பா இந்தியாவில் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டர் 946 டிராகன் ஆகும். பெயருக்கு ஏற்ப இந்த ஸ்கூட்டரின் உடல் பகுதியில் டிராகன் படம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரின் தோற்றம் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமானதாகவும், மிகவும் ஸ்டைலானதாகவும் உள்ளது. இதற்கேற்ப இந்த வெஸ்பா ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது சுமார் ரூ.14.28 லட்சமாக உள்ளது.

most costliest scooters in india

பிஎம்டபிள்யூ சி400 ஜிடி (BMW C400 GT): பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்கூட்டர் இதுவாகும். 2021இல் அறிமுகம் செய்யப்பட்ட சி400 ஜிடி ஸ்கூட்டர்கள் முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது, இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மேலே கண்ட வெஸ்பா ஸ்கூட்டரை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக விளங்கும் இந்த பிஎம்டபிள்யூ ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.11.25 லட்சமாக உள்ளது.

most costliest scooters in india

கீவே சிக்ஸ்டீஸ் 300ஐ (Keeway Sixties 300i): சீன 2-வீலர் நிறுவனமான கீவே இந்தியாவில் விற்பனை செய்யும் ரெட்ரோ ஸ்டைலிலான ஸ்கூட்டர் சிக்ஸ்டீஸ் 300ஐ ஆகும். பார்ப்பதற்கு 1960ஆம் காலக்கட்ட ஸ்கூட்டர் போன்று தோற்றமளிக்கும் சிக்ஸ்டீஸ் 300ஐ ஸ்கூட்டரில் இருக்கைகள் கூட இரண்டாக பிரிக்கப்பட்டதாக வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3.30 லட்சமாக உள்ளது.

most costliest scooters in india

கீவே வியஸ்டே 300 (Keeway Vieste 300): சீனாவின் கீவே நிறுவனத்தின் மற்றொரு விலையுயர்ந்த ஸ்கூட்டர். மேலே பார்த்த சிக்ஸ்டீஸ் 300ஐ ஸ்கூட்டருடன், அதன் அதே 300சிசி என்ஜின் உடன் வியஸ்டே 300 அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஸ்கூட்டர் ஆனது தோற்றத்தில் மாடர்ன் தரத்திலானது ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.25 லட்சமாக உள்ளது.

most costliest scooters in india

ஏத்தர் 450 அபெக்ஸ் (Ather 450 Apex): இது இந்தியாவின் வேகமான செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கியதிலேயே விலைமிக்க ஸ்கூட்டர் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.95 லட்சமாக உள்ளது. கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் அடுத்த 8- 9 மாதங்கள் வரையில் மட்டுமே விற்பனையில் இருக்கும் என கூறப்படுகிறது. அப்படியென்றால், இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடல்களின் எண்ணிக்கை குறைவுதான். இருப்பினும், இவ்வாறு விலையுயர்ந்த ஸ்கூட்டர்கள் நிறைய விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, முதலவதாக பார்த்த வெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டரின் விலையில் ஒரு எஸ்யூவி காரையே வாங்கிவிடலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 14, 2024, 17:00 [IST]
English summary
Most costliest scooters in india check full list here
மேலும்... #scooters #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X