2024 மோட்டோ ஜிபி பைக் ரேஸ் போட்டிகளை காண்பது இவ்வளவு ஈஸியா? எப்படி பாக்கனும் தெரியுமா?

இந்த 2024-ம் ஆண்டிற்கான பாரத் ஜிபி பைக் ரேஸ் பந்தயத்தின் ஒளிபரப்பு உரிமத்தை யூரோஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2024 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தெற்காசியா பகுதியில் நடக்க உள்ள மோட்டோ ஜிபி பந்தயத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மோட்டோ ஜிபி என்ற பைக் ரேஸ் போட்டியை தற்போது இந்தியாவில் துரோனா என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு முதல் முறையாக பாரத் ஜிபி என்ற பெயரில் இந்த போட்டிகள் இந்தியாவில் நடந்தன. உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பெருநகர பகுதியில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற பகுதியில் இந்த போட்டிகள் நடைபெற்றது.

moto gp

மோட்டோ ஜிபி பாரத் போட்டிகள் நடந்து முடிந்தது போது இந்தியாவில் பைக் ரேஸ் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது இதற்கு முன்னர் பைக் ரேஸ் போட்டிகளை காண வேண்டும் என்றால் வெளிநாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்று இருந்த நிலை கடந்த ஆண்டு மாறியது. அப்போது இனி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலும் பைக் ரைஸ் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான மோட்டோ ஜிபி பைக் ரேஸ் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு மோட்டோ ஜிபி பாரத் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ஜியோ சினிமா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.

moto gp

ஜியோ சினிமா நிறுவனம் தனது பயனர்களுக்காக இலவசமாக இந்த போட்டிகளை நேரடியாக தனது செல்போன் ஆப் மூலம் ஒளிபரப்பு செய்து வந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் தொடர்ச்சியாக 2024 ஆம் ஆண்டிற்கான ஒளிபரப்பு உரிமத்தை தற்போது யூரோஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துரோனா நிறுவனத்துடன் மூன்று ஆண்டுக்கான ஒளிபரப்பு உரிமத்தை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியாவில் நடக்கும் அனைத்து மோட்டோ ஜிபி போட்டிகளையும் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த 2024-ம் ஆண்டில் மொத்தம் 21 பைக் ரேஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியாக கத்தார் நாட்டில் ஒரு மார்ச் 8 முதல் 10ஆம் தேதி வரை கத்தார் ஜிபி மோட்டார் பந்தயப் போட்டி நடக்கிறது.

moto gp

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் தான் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள 21 போட்டிகளையும் யூரோஸ்போர்ட் இந்தியா நிறுவனம் டிஸ்கவரி ப்ளஸ் ஆப் மூலம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்த ஆப்பை ஒரு மாதத்திற்கான சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமாக ரூபாய் 199 அல்லது ஆண்டு பதிவு கட்டணமாக ரூபாய் 399 செலுத்தி இந்த போட்டியை நேரலையில் காண முடியும்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள பாரத் ஜிபி போட்டியின் இரண்டாவது எடிசன் போட்டிகள் ஏற்கனவே முதல் எடிசன் போட்டி நடந்த அதே புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற இடத்தில் தான் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது நடந்து வருகின்றன. இன்னும் அதிக கால அவகாசம் இருப்பதால் இதற்கான ஏற்பாடுகள் இதுதான் துரிதப்படுத்தப்படும்.

மோட்டோ ஜிபி பாரத் போட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் அதன் பின்பு இந்தியாவில் பைக் ரேஸ் ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர். கடந்தாண்டே டிக்கெட் எல்லாம் வேகமாக விற்ற நிலையில் இந்த ஆண்டும் இந்த பைக் ரேஸ் போட்டியை காண தற்போதே பலர் ஆவலாக இருக்கிறார்கள். இதனால் இந்த ஆண்டும் டிக்கெட் அதிகமாக விற்பனையாகும். ஆன்லைன் மூலமும் பலர் இந்த போட்டியை காண்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த ஆண்டு யூரோஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனம் மோட்டோ ஜிபி போட்டிகளை ஒளிபரப்பு அதற்கான உரிமையை கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியர்கள் பலர் இந்த போட்டியை காண பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. மக்கள் மத்தியில் பைக் ரேஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் இதை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 26, 2024, 10:32 [IST]
English summary
Moto gp 2024 season watch live broadcast details india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X