1.3லட்ச ரூபா கம்மி பண்ண சீன நிறுவனம்! ராயல் என்பீல்டு ட்வின் பைக்கை சமாளிக்க முடியாம விலையை குறைச்சிருக்காங்க!

சீனவைச் சேர்ந்த சோங்நெங் வெயிக்கிள் குழுமம் (Zhongneng Vehicle Group)-க்கு சொந்தமான நிறுவனம் மோட்டோ மோரினி (Moto Morini). இந்த நிறுவனம் ஆதிஸ்வர் ஆட்டோ ரைடு இந்தியா எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இரண்டு சக்கர வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த பைக் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்-கேப் 650 பைக் மாடல் இருக்கின்றது. ராயல் என்பீல்டு இரட்டையர்கள் பைக் மாடல்களான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகியவற்றைப் போலவே இதுவும் இரட்டையர்களாகவே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Moto morini x cape 650

எக்ஸ்-கேப் 650 (X-CAPE 650) மற்றும் எக்ஸ்-கேப் 650 எக்ஸ் (X-CAPE 650X) ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. அறிமுகத்தின்போது இந்த பைக் மாடலுக்கு ரூ. 6.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இத்தகைய அதிகபட்ச விலையையே தற்போது மோட்டோ மோரினி நிறுவனம் குறைத்திருக்கின்றது.

ரூ. 1.3 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், முன்னதாக ஆறரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வந்த மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 பைக் தற்போது ரூ. 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.

இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 650 சிசி திறன் கொண்ட 8 வால்வுகள் அடங்கிய 60 எச்பி மற்றும் 54 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மோட்டார் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு பிரெம்போ பிரேக்குகள் மற்றும் பாஷ் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகியவை எக்ஸ்-கேப் 650 பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக எக்ஸ்-கேப் 650 பைக்கின் முன்பக்கத்தில் மசரோச்சி அட்ஜெஸ்டபிள் ஃபோர்-க்கும், பின்பக்கத்தில் கேஒய்பி ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளும் வசதிக் கொண்ட விண்ட் ஸ்கிரீனும் அந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், 7 அங்குல டிஎஃப்டி திரை, 19 அங்குல ஸ்கார்பியன் ரேல்லி எஸ்டிஆர் டயர்கள், எல்இடி ஹெட்லைட் மற்றும் பேக்லிட் ஸ்விட்ச் கியர் மற்றும் 18 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட ஃப்யூவல் டேங்க் ஆகியவையும் எக்ஸ்-கேப் 650 பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பைக் இந்தியாவில் கவாஸகி வெர்சிஸ் 650, சுஸூகி வி -ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி மற்றும் டிரையம்ப் டைகர் 660 உள்ளிட்ட பைக்குகளுக்கும் போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டே சீன நிறுவனம் தற்போது அதன் விலையை மிகப் பெரிய அளவில் குறைத்திருக்கின்றது.

இதன் விளைவாக வரும் நாட்களில் மோட்டோ மோரினி எக்ஸ்-கேப் 650 பைக்கின் விற்பனை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மோட்டோ மோரினி நிறுவனம் இந்த பைக்கை முதன் முதலில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. அப்போது பலரின் கவனத்தை அந்த பைக் ஈர்த்தது. இதைத்தொடர்ந்தே சீன நிறுவனம் இந்த பைக்கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை காரணமாகவே சீன நிறுவனம் எக்ஸ்-கேப் 650 பைக் மாடலின் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்திருக்கின்றது. இதன் வாயிலாக மீண்டும் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் இடத்தை இந்த பைக் அடைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இதற்கு கிடைக்கும் வரவேற்பு சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 14:30 [IST]
English summary
Moto morini x cape 650 price reduced here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+