சென்னைக்கு டஃப் கொடுக்கலாம்னு உபி பாத்துச்சு.. ஆனா இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு அவங்களே எதிர்பார்க்கல!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஃபார்முலா 4 நைட் ரேஸ் (Formula 4 Night Race) நடைபெற்றது. ஆரம்பத்தில் இந்த போட்டி நடைபெறுவதில் சில சிக்கல்களைச் சந்தித்தாலும் இறுதியாக, போட்டிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த போட்டியால் சென்னையின் தீவுத் திடல் பகுதியே பகல் போல் காணப்பட்டது. மேலும், சென்னை முழுக்க விழாக் காலம் பூண்டதைப் போல காட்சியளித்தது. இத்தகைய ஓர் போட்டியே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருந்த நிலையில் அது ரத்தாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2025 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த மோட்டோஜிபி (MotoGP) சீசனின் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் (Indian Grand Prix) போட்டி 2026 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இது மோட்டோ ஜிபி போட்டி பிரியர்களின் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

2025 indian grand prix race cancelled

'ஆபரேஷனல் பிரச்னைகள்' இருப்பதாகக் கூறியே போட்டி ஒத்தி வைப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது. அதாவது, போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறி தள்ளி வைப்பு முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே இந்த போட்டியானது நடப்பு 2024 ஆண்டில் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ஆண்டில் இருந்தே அடுத்த ஆண்டிற்கு அது தள்ளிப்போடப்பட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் ஒத்தி வைப்பு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டிற்கு இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டிலேயே இந்த போட்டி நடைபெறுவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

2024 ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைப்பதற்கும் இதே ஆபரேஷனல் பிரச்சனையே காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையிலேயே 2025 ஆம் ஆண்டிலும் அதே காரணங்களால் கூறப்பட்டு இருக்கின்றது. மேலும், தொடர்ச்சியாக போட்டி நடைபெறும் ஆண்டு தள்ளிப்போடப்பட்டு வருவதால் இந்த போட்டி 2026ஆம் ஆண்டிலாவது நடைபெறுமா என்கிற சந்தேகமே பலருக்குள் எழும்பியிருக்கின்றது.

இருப்பினும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்து வருவதன் காரணத்தினாலேயே இந்த ஒத்தி வைப்பு என்பது மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். மோட்டோஜிபி போட்டியை நடத்துவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. போட்டி நடைபெற இருக்கும் ரேஸ் டிராக்குகள் சர்வதேச தரத்திற்கு இணையானதாக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக, போட்டியாளர்களுக்கு பாதுகாப்பானதாக அந்த சர்க்யூட் இருக்க வேண்டும். இதுபோன்று இன்னும் பல தர சான்றுகளை போட்டி நடைபெறும் அந்த ரேஸ் டிரைக் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும். ஆனால், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் ஒத்தி வைப்பிற்கு இதுபோன்ற எந்த காரணமும் இல்லை.

இந்த சீசனின் இறுதிக் கட்டத்திற்கு நாள் இல்லாத காரணத்தினாலேயே மோட்டோ ஜிபி 2026 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் இந்த போட்டிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியை கிரேட்டர் நொய்டாவில் நடத்துவதற்காக ஏற்கனவே மோட்டோ ஜிபி இன்வெஸ்ட் உபி உடன் தன்னுடைய கூட்டணியை மேற்கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், வரும் 2025 ஆம் ஆண்டில் இல்லை என்றாலும் 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் இந்த போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையே மோட்டோஜிபி தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவில் முதன் முதலில் இந்தியன் கிராண்டு பிரிக்ஸ் போட்டிகள் 2023ஆம் ஆண்டிலேயே நடைபெற்றன. இதை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்ததாகக் கூறப்படுகின்றது. இந்த வெற்றிகரமான அறிமுகத்தைத் தொடர்ந்து நடப்பாண்டில் இதன் தொடர்ச்சி போட்டிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2024இல் அது நடக்காது 2025லேயே நடக்கும் என கூறப்பட்டது. மேலும், 2025 மார்ச் மாதத்தில் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2025லும் நடைபெறாது 2026-லேயே அது நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸை 2026-க்கு தள்ளிவைக்கும் முடிவு ஏற்பாட்டாளர்களுக்கு மட்டுமல்ல, இந்த நிகழ்வின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தடைகளை உடைத்து 2026 ஆம் ஆண்டில் நிச்சயம் இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்பதே ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2024, 5:00 [IST]
English summary
Motogp postpones indian grand prix from 2025 to 2026 due to operational issues
மேலும்... #Motorsport #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+