ரூ.1.30 லட்சத்தில் விலை அறிவித்த போதிலும் எல்லாரும் போட்டி போட்டு புக் பண்றாங்க! ஸ்கூட்டரில் என்ன ஸ்பெஷல்?

மோட்டோஹாஸ் (Motohaus), இந்திய மார்க்கெட்டில் நுழைந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் மோட்டோஹாஸ் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த நிலையில், வி.எல்.எஃப் டென்னிஸ் (VLF Tennis) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனை வெளிக்காட்டும் வகையில் வெளியாகி உள்ள புதிய தகவலை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், கடந்த நவம்பர் மாத இறுதியில் மோட்டோஹாஸ் நிறுவனம் அதன் புதிய வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

unexpected bookings for vlf tennis

அப்போது ஸ்கூட்டருக்கான விலைகளும் அறிவிக்கப்பட்டன. மோட்டோஹாஸ் ஆனது மஹாராஷ்டிராவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். ஆனால், அது இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ள வி.எல்.எஃப் டென்னிஸ் ஆனது இத்தாலி நாட்டை சேர்ந்த வி.எல்.எஃப் நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதாவது, ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மோட்டோஹாஸ் நிறுவனம் வாயிலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதேபாணியில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகளையும் இந்தியாவில் மோட்டோஹாஸ் நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வாரம் 2024 கண்காட்சியில் வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், பிரிக்ஸ்டன் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகளையும் பார்வையாளர்கள் முன் மோட்டோஹாஸ் நிறுத்தியது.

unexpected bookings for vlf tennis

இன்னும் சொல்லப்போனால், இந்தியா பைக் வாரம் 2024 கண்காட்சியின் அதிகாரப்பூர்வ பார்ட்னர்களுள் மோட்டோஹாஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியின் மூலமாக, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு வர உள்ளது உறுதியாகி உள்ளது. மேலும், இந்த கண்காட்சியை தொடர்ந்து வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

அதாவது, கடந்த நவம்பர் மாத இறுதியில் புக்கிங் துவங்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களிலேயே சுமார் 300க்கும் அதிகமான வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன. மோட்டோஹாஸ் போன்ற இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு இது பெரிய நம்பர் ஆகும். வி.எல்.எஃப் டென்னில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

unexpected bookings for vlf tennis

ஓலா எஸ்1 ஏர், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏத்தர் ரிஸ்டா உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1,500-வாட் ஹப் மோட்டார் மற்றும் 2.5kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 130கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது மோட்டோஹாஸ் நிறுவனம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 65kmph ஆகும்.

இந்த ஸ்கூட்டருடன் வழங்கப்பட உள்ள 720-வாட் சார்ஜரின் மூலமாக பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப ஏறக்குறைய 3 மணிநேரம் தேவைப்படுமாம். இத்தாலி நாட்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பினும், வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து, இந்தியாவில் முழு ஸ்கூட்டராக அசெம்பிள் செய்ய மோட்டோஹாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாட்டில் வெற்றி பெற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவருவது சிறந்த முடிவுதான். இருப்பினும், ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சத்தில் நிர்ணயிக்கப்படுவது எந்த அளவிற்கு இந்திய மக்களை கவரும் என்பது தெரியவில்லை. குறுகிய காலத்திலேயே 300க்கும் அதிகமான வி.எல்.எஃப் டென்னிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக் செய்யப்பட்டுள்ளன என்றால், இந்த ஸ்கூட்டரை மக்கள் ஏற்க ஆரம்பித்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2024, 20:59 [IST]
English summary
Motohaus receives unexpected bookings for vlf tennis electric scooter check all details here
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X