2023-லேயே இதில் ஒரு பைக்கை வாங்கி இருந்தால் காசு மிச்சம் ஆகியிருக்கும்!! இதுக்கு அப்புறம் அது முடியாது!

புது 2024ஆம் வருடம் துவங்கிவிட்ட நிலையில், பல நல்ல விஷயங்களை இந்த புதிய வருடம் கூடவே அழைத்து வந்துள்ளது. அதேநேரம், சில கெட்ட செய்திகளும் நமக்காக காத்திருந்தன. அந்த கெட்ட செய்திகள் வேறொன்றும் இல்லை, விலை அதிகரிப்புகள் தான். ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் சில நிறுவனங்கள் ஏற்கனவே விலை அதிகரிப்பை அறிவித்துவிட்டன.

அவற்றுள் முக்கியமான இரு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ராயல் என்ஃபீல்டு மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். இதில் டிரையம்ப் நிறுவனம் அதன் ஸ்பீடு 400 பைக்கின் விலைகளை இந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே விலை குறைவான டிரையம்ப் பைக்காக ஸ்பீடு 400 கடந்த 2023 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

motorcycles thats prices increased from 2024

ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த மலிவு விலை டிரையம்ப் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.23 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இது அறிமுக விலை என்றும், ஸ்பீடு 400 பைக்கை புக் செய்யும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் பைக் கிடைக்கும் எனவும் அப்போதே டிரையம்ப் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் ஸ்பீடு 400 பைக்கின் அறிமுக விலை நீட்டிக்கப்பட்டது. இதன்படி, கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு ரூ.2.23 இலட்சத்தில் இந்த டிரையம்ப் பைக் கிடைத்துவந்தது. இந்த நிலையில், 2024 ஜனவரி 1 முதல் இந்த விலை ரூ.10,000 உயர்த்தப்பட்டதால், டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.33 இலட்சமாக அதிகரித்துள்ளது.

motorcycles thats prices increased from 2024

டிரையம்ப்பின் பிரபலமான ஸ்பீடு 900 மற்றும் ஸ்பீடு 1200 சூப்பர்பைக்குகளின் மினி வெர்சனாக ஸ்பீடு 400 விளங்குகிறது. இந்த பைக்கில் 398சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தின் புதிய மாடர்ன் மோட்டார்சைக்கிளான ஹிமாலயன் 450-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16,000 வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2023 நவம்பர் மாத இறுதியில் கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் கண்காட்சியில் ஹிமாலயன் 450 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. காஸா ப்ரவுன், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், காமெட் வொயிட் மற்றும் ஹன்லே பிளாக் என மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது.

motorcycles thats prices increased from 2024

டிரையம்ப் நிறுவனத்தை போலவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் புதிய ஹிமாலயன் 450-இன் விலையை 2024இல் இருந்து அதிகரிக்க உள்ளதாக பைக்கின் அறிமுகத்தின்போதே தெரிவித்துவிட்டது. இதன்படி, ஹிமாலயன் 450 பைக்கின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16,000 அதிகரிக்கப்பட்டு ரூ.2.85 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மற்ற வேரியண்ட்களின் விலைகள் ரூ.14,000 - ரூ.15,000 அதிகரிக்கப்பட்டு உள்ளன. 2024 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து, ஹிமாலயன் 450 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.85 இலட்சம் - ரூ.2.98 இலட்சம் ஆக அதிகரித்து உள்ளன. ஹிமாலயன் 450 பைக்கில் 452சிசி லிக்யுடு-கூல்டு DOHC ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.

motorcycles thats prices increased from 2024

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அறிமுகம் செய்யப்பட்ட பின், பைக்கின் விற்பனையை அதிகரிக்கவும், பைக்கை விளம்பரப்படுத்தவும் விலையை ஆரம்பத்தில் குறைவாக நிர்ணயித்து, பின்னர் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். மேற்கூறப்பட்ட இரு பைக்குகளை கடந்த 2023ஆம் ஆண்டிலேயே புக் செய்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இனி வாங்க போகிறவர்கள் 2024 மாடலை வாங்கிய பெருமையை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 10:13 [IST]
English summary
Mtorcycles thats prices hiked from 2024 january 1 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X