இந்தியாவே அதிகம் எதிர்பார்க்கும் பைக்குகளின் லிஸ்ட் இதுதான்! முழுமையான தகவல்களுடன் வீடியோ!
இந்தியாவில் டூவீலர் செக்மெண்ட் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக பல்வேறு வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி வருகிறார்கள். இந்நிலையில் வாடிக்கையாளர்களை அதிகம் கவருவதற்காக பல்வேறு விதமான புதிய தயாரிப்புகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வடிவமைத்து வரிசையாக இந்திய மார்க்கெட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. இதன் மூலம் தற்போது உள்ள இளைஞர்களை கவர முடிவு செய்து அதிக பவர்ஃபுல்லான இன்ஜின்களை கொண்ட பைக்குகளை தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அதன்படி இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கும் கேடிஎம் நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் விரைவில் அறிமுகமாக உள்ள பைக்குகளின் பட்டியலை தான் வீடியோவாக உங்களுக்கு வழங்கி உள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கொரில்லா 450 என்ற பைக் இருக்கிறது. இந்த பைக்கை தற்போது நிறுவனம் தயாரித்து இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. விரைவில் இந்த பைக் விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது 500 சிசிக்கு குறைவான செக்மெண்டில் பைக்குகள் அதிகம் விற்பனையாவதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்படியான ஒரு பைக்கை தயாரித்துள்ளது.

அடுத்ததாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 650 மற்றும் பியர் 650 ஆகிய இரண்டு பைக்குகளை களம் இறக்க உள்ளனர். கேடிஎம் நிறுவனமும் தனது கேடிஎம் 390 அட்வெஞ்சர் ரேலி ப்ரோ என்று எடிஷனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த பைக் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் பைக்கை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








