நாளுக்கு ஒன்னுனு அறிமுகம் செய்வாங்க போலையே.. நேத்து அறிமுகம் செய்ததைவிட கம்மி விலையில் புதிய பைக்!

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி ஆண்டின் தொடக்கத்தை சிறப்பிக்கும் விதமாக நேற்றைய தினம் (ஜனவரி 1) ஓர் தரமான இருசக்கர வாகன மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டு சக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அது 2024 கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் மாடலையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

வருஷத்தின் முதல் நாளில் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவாஸாகி நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய இந்த வாக்குறுதியை அது நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, தற்போது சொல்லாத ஒன்றையும் அந்த நிறுவனம் செய்து காட்டி இருக்கின்றது.

Kawasaki eliminator

நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கைத் தொடர்ந்து அது தற்போது மற்றுமொரு தயாரிப்பையே புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கவாஸாகி எலிமினேட்டர் பைக் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 5 லட்சம் 62 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. கவாஸாகி எலிமினேட்டர் ஓர் க்ரூஸர் வகை பைக் மாடல் ஆகும். மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இந்த க்ரூஸர் பைக்கின் ஸ்டைலான தோற்றத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தாழ்வான அமைப்பைக் கொண்ட இருக்கை, அதிக கம்ஃபோர்டபளிலான வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Kawasaki eliminator price

இது ஓர் இரு துண்டுகளாக பிரிக்கப்பட்ட அமைப்புடைய இருக்கை ஆகும். இத்துடன், வட்ட வடிவ ஹெட்லேம்ப், கண்ணீர் துளி அமைப்பிலான ஃப்யூவல் டேங்க், மேகாஃபோன் எக்சாஸ்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எலிமினேட்டர் ஓர் 450 சிசி பைக் மாடலாகும்.

இதில் 451 சிசி பாரல்லல் ட்வின் வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், டிரெல்லிஸ் ஃப்ரேம் பைக்கின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Kawasaki eliminator rear

இந்த பைக்கில் டெலிவரி பணிகள் இந்த ஜனவரி மாதத்திலேயே தொடங்கப்பட இருக்கின்றது. இந்த தகவல் எலிமினேட்டர் பைக்கை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பைக்கில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் பஞ்சமின்றி காணப்படுகின்றன. அந்தவகையில், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச் வசதி உடன் வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரைப் போல டேக்கோ மீட்டர், ஃப்யூவல் ஜேக், கூலண்ட் டெம்ப்ரேச்சர், பராமரிப்பு குறித்த ரிமைண்டர் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வழங்கும். இதுதவிர, கியர் பொசிஷன், நேரம், ஓடோமீட்டர், இரண்டு ட்ரிப் மீட்டர்கள் ரேஞ்ஜ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றையும் இந்த திரை வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

Kawasaki eliminator side view

மேலும், பாதுகாப்பான பயணத்திற்காக டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் அம்சம் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 310 மிமீ அளவுள்ள டிஸ்க் முன் வீலிலும், 220 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவற்றுடன், சிறந்த இயக்க அனுபவம் வழங்கும் விதமாக 411 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பிக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல பிரீமியம் அம்சங்களால் இந்த பைக் தற்போது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கவாஸாகி நிறுவனம் ராயல் என்பீல்டு தயாரிப்புகளுக்கு போட்டியாக அதன் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையிலேயே தற்போது புதிய எலிமினேட்டர் பைக்கையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த புதுமுக பைக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 2, 2024, 20:40 [IST]
English summary
My 2024 kawasaki eliminator cruiser launched with starting price at rs 5 62
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X