டிவிஎஸ் ஸ்கூட்டரின் மார்க்கெட் காலியாக போகுது!! பஜாஜ் உருவாக்கி உள்ள புது இ-ஸ்கூட்டர் பயங்கரமா இருக்கு!

2024 பஜாஜ் சேத்தக் ப்ரீமியம் (Bajaj Chetak Premium) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் படங்கள் டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து இணையத்தில் வெளியாகி உள்ளன. பலரை வெகுவாக கவர்ந்துள்ள இந்த படங்களில் புதிய சேத்தக் ஸ்கூட்டரின் தோற்றம் எவ்வாறு உள்ளது என்பதை பற்றியும், இந்த ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டர்களுள் ஒன்று, பஜாஜ் சேத்தக் எனலாம். 1990ஆம் காலக் கட்டத்தில் பெட்ரோல் ஸ்கூட்டராக பலரால் அறியப்பட்ட சேத்தக், தற்சமயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக பிரபலமடைந்து வருகிறது. பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

2024 chetak premium images out

இருப்பினும், சேத்தக்கை காட்டிலும் செயல்படுதிறன் மிக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நிறைய மார்க்கெட்டுக்கு அதன்பின் வந்துவிட்டன. இதனை கருத்தில்கொண்டு, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் சேத்தக் ஸ்கூட்டரில் புதிய பிரீமியம் வெர்சனை உருவாக்கி உள்ளது. புதிய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரின் அறிமுகம் வருகிற ஜனவரி 5ஆம் தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், புதிய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரின் படங்கள் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகி உள்ளன. பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் தற்சமயம் அர்பன் மற்றும் பிரீமியம் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பிரீமியம் வேரியண்ட் விரைவில் அப்கிரேட் செய்யப்படுகிறது. இதன் அறிமுகத்தையே வருகிற ஜன.5ஆம் தேதி எதிர்பார்க்கிறோம்.

2024 chetak premium images out

தற்சமயம், சேத்தக்கின் அர்பன் மற்றும் பிரீமியம் வேரியண்ட்களுக்கு இடையே தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், புதிய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு பிறகு பெரிய வித்தியாசம் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, சேத்தக் அர்பன் வேரியண்ட்டை வழக்கம்போல் குறைந்த விலையிலும், புதிய பிரீமியம் வேரியண்ட்டை சற்று கூடுதல் தொகையிலும் விற்பனை செய்ய பஜாஜ் சேத்தக் திட்டமிட்டுள்ளது.

விலை அதிகரிக்கப்படுவதற்கு இணையாக, புதிய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரின் தோற்றமும், தொழிற்நுட்ப வசதிகளும் மெருக்கேற்றப்பட்டு இருப்பதை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில் காண முடிகிறது. எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக, புதிய டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் திரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

2024 chetak premium images out

படங்களில், ஸ்கூட்டரின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை பார்க்கும்போது, ப்ளூடூத் இணைப்பு உடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷனை வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ரிமோட் இம்மொபைலிசேஷன் ஃபங்க்சன் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டத்தையும் புதிய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரில் பஜாஜ் நிறுவனம் வழங்கலாம்.

பஜாஜ் சேத்தக்கில் ஏற்கனவே ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. அவற்றை புதிய பிரீமியம் ஸ்கூட்டரிலும் எதிர்பார்க்கலாம். இந்த புதிய ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் பூட் ஸ்பேஸை 18 லிட்டர்களில் இருந்து 21 லிட்டர்களாக பஜாஜ் அதிகரித்து இருக்கும் என கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட, அளவில் பெரியதான 3.2 kWh பேட்டரி பேக் புதிய சேத்தக் பிரீமியம் ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ளது. இது ஐடிசி ஸ்டாண்டர்டில் 127கிமீ ரேஞ்சை வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

2024 chetak premium images out

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2020இல் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் விற்பனை நல்லப்படியாக இருந்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக விற்பனை டல் அடிக்க ஆரம்பித்துள்ளது. ஆதலால், சேத்தக்கில் அப்டேட்டை கொண்டுவருவதற்கு இது சரியான நேரமே. அதேநேரம், குறைந்த விலையிலும் அர்பன் வேரியண்ட்டில் சேத்தக் ஸ்கூட்டரை வழங்க வேண்டும் என பஜாஜ் எண்ணுவது அதன் வியாபார யுக்தியை காட்டுகிறது.

Source: Twitter

More from DriveSpark

Article Published On: Wednesday, January 3, 2024, 11:59 [IST]
English summary
New bajaj chetak premium electric scooter images out from showroom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X