புதுசா பல்சர் பைக்கை வாங்கும் முன் இந்த விஷயத்தை பாருங்க!! ஹீரோ, டிவிஎஸ்-க்கு பஜாஜின் அடுத்த அதிரடி சவால்!

2024 பஜாஜ் பல்சர் 250 (Bajaj Pulsar 250) பைக்குகள் புதிய தோற்றத்தில் சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த சோதனை ஓட்டத்தின்போது பைக்குகள் மறைப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடையாளமே அதன் பல்சர் பைக்குகள் எனலாம். ஏனெனில், அந்த அளவிற்கு பஜாஜ் நிறுவனத்தை பற்றி தெரியாதவர்கள் கூட பல்சர் பைக்குகளை பற்றி அறிந்திருக்கின்றனர். இந்திய மார்க்கெட்டில் மிக பிரபலமானதால், விற்பனையில் உள்ள பல்சர் பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பஜாஜ் விரும்புகிறது.

new bajaj pulsar 250 spotted

இந்த வகையில், சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் 250 பைக்குகள் விரைவில் அப்டேட் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய பல்சர் 250 பைக்குகள் பொது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் அக்கோடிரைவ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் விலையுயர்ந்த பல்சர் பைக்குகளாக விளங்கும் பல்சர் 250 பைக்குகளில் என்250 மற்றும் எஃப்250 என இரு விதமான மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள பல்சர் பைக்குகள் இரண்டில் ஒன்று பல்சர் என்250 மற்றும் மற்றொன்று எஃப்250 போன்று தெரிகிறது.

new bajaj pulsar 250 spotted

இந்த சோதனை ஓட்டத்தில் பைக்குகள் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளதால், எது எந்த மாடல் என்பதை அடையாளம் காண்பது கொஞ்சம் கடினமானதாக உள்ளது. இருப்பினும், இந்த பல்சர் 250 பைக்குகளில் மிக முக்கியமான அப்டேட்டாக தலைக்கீழான ஃபோர்க்குகள் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டு இருப்பதை நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில் காண முடிகிறது.

new bajaj pulsar 250 spotted

இந்த சஸ்பென்ஷனை என்.எஸ்200 மற்றும் என்.எஸ்160 பைக்குகளில் காண முடியும். தற்சமயம் பல்சர் 250 பைக்குகளில் 37மிமீ-இல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்தில் வழங்கப்படுகின்றன. இதே சஸ்பென்ஷன் செட்-அப் தான் பல்சர் என்160 பைக்கிலும் பொருத்தப்படுகிறது. சஸ்பென்ஷன் அப்கிரேட் செய்யப்படுவது மட்டுமின்றி, அதற்கேற்ப பைக்கின் பிரேக் சிஸ்டமும் அப்டேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

new bajaj pulsar 250 spotted

பல்சர் 250 பைக்குகளில் மற்றொரு முக்கியமான அப்டேட் என்று பார்த்தால், கட்டிங்-எட்ஜ் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையை ப்ளூடூத் மூலமாக மொபைல் போன் உடன் இணைத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதன் மூலமாக, போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், நேவிகேஷன் மற்றும் இசை உள்ளிட்டவற்றை பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை மூலமாக கண்ட்ரோல் செய்யலாம்.

இவற்றுடன், பல்சர் 250 பைக்குகளின் தோற்றத்தையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மெருக்கேற்றி இருப்பதை தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் காண முடிகிறது. இதன் மூலமாக, பைக்குகளின் ஏரோடைனாமிக்ஸ் மேம்பட்டுள்ளதையும் காண முடிகிறது. இவற்றுடன், பல்சர் என்250 மற்றும் எஃப்250 பைக்குகளின் கிராஃபிக்ஸ் மற்றும் டிகால்ஸையும் பஜாஜ் மாற்றலாம்.

new bajaj pulsar 250 spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய சிசி என்ஜின் கொண்ட பல்சர் பைக்குகளாக இருப்பினும், பல்சர் 250-இன் விலைகள் குறைவானதாக உள்ளன. இதற்கு பைக்கின் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் விஷயத்தில் பஜாஜ் நிறுவனம் கையாளும் யுக்தியும் ஒரு காரணமாகும். ஆனால், புதிய பல்சர் 250 பைக்குகளின் சஸ்பென்ஷன் & பிரேக் செட்-அப்கள் அப்கிரேட் செய்யப்படுவதால், அதற்கேற்ப பல்சர் 250 பைக்குகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source: AckoDrive

More from DriveSpark

Article Published On: Tuesday, January 23, 2024, 18:28 [IST]
English summary
New bajaj pulsar 250 bikes spotted while testing check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X