பைக் பிரியர்கள்கூட இந்த ஸ்கூட்டரோட வருகைக்காக காத்திருக்க போறாங்க.. ஹீரோவோட ஸ்கூட்டரா இது! தரமா இருக்குங்க!

இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), விரைவில் இந்தியாவில் ஓர் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே நிறுவனம் அந்த ஸ்கூட்டரின் டீசர் படங்களை வெளியிட்டு இருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டெஸ்டினி 125 (Destini 125)-யை புதிய தலைமுறையாக உருவாக்கி இருப்பதாகவும், அதையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும், இப்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படங்களும் இதனுடையதுதான் என தெரிகின்றது.

மேலும், இதுவே இந்த ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்படுவது முதல் முறையாகும். இந்த புதிய தலைமுறை டெஸ்டினி 125 வரும் விழாக் காலத்தை முன்னிட்டு சீக்கிரமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதை முன்னிட்டே அந்த ஸ்கூட்டரின் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஓர் முயற்சியாக ஹீரோ நிறுவனம் தற்போது புதிய டெஸ்டினி 125இன் டீசர் படங்களை வெளியிட்டு வருகின்றது.

New gen hero destini 125 teaser

புதிய தலைமுறையாக டெஸ்டினி 125-யை தயார் செய்திருப்பதால் எண்ணற்ற மாற்றங்கள் இந்த ஸ்கூட்டரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இப்போது வெளியாகி இருக்கும் டீசர் படங்கள் வாயிலாக டெஸ்டினி 125 மாடலின் ஹெட்லைட், இன்டிகேட்டர் மற்றும் ரியர் உள்ளிட்டவை மிகவும் ஸ்டைலானதாகவும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதாகவும் மாற்றப்பட்டு இருப்பதை உணர்த்துகின்றன.

குறிப்பாக, இதன் ஹெட்லைட் டிஆர்எல்-உடன் இணைக்கப்பட்ட வகையில் தயார் செய்யப்பட்டு இருப்பதை இந்த டீசர் படம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து, அது 'எச்' (H) எனும் எழுத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. ஹீரோவின் முதல் எழுத்தையே இது குறிக்கின்றது. இதேபோல், இதன் இன்டிகேட்டர் லைட்டுகள் ஹேட்ச்பேக் கார்களில் இடம் பெறுவதைப் போல குட்டியாகவும், அதேவேளையில், ஓர் மிருகத்தின் மஞ்சள் நிற கண்களைப் போலவும் தெரிகின்றது.

New gen hero destini 125 disc brake and rear light

இதேபோல், இதன் ரியர் ஸ்டாப் லைட்டும் தனித்துவமான ஸ்டைலையேக் கொண்டிருக்கின்றது. ஆகையால், புதிய தலைமுறை டெஸ்டினி 125 அட்டகாசமான ஸ்டைலைக் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், இந்த ஸ்கூட்டரின் முன் வீலில் டிஸ்க் பிரேக் இடம் பெற இருப்பதையும் இந்த டீசர் படம் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

பின் வீலில் டிரம் பிரேக்கே இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றுடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக சிபிஎஸ்-ம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமாதிரியான சிறப்பான சிறப்பம்சங்கள் இன்னும் பல இந்த ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதேபோல், இன்னும் பல கவர்ச்சியான மாற்றங்களும் புதிய தலைமுறை டெஸ்டினி 125-இல் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஆனால், எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என நம்பப்படுகின்றது. அதே 125 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சினே புதிய தலைமுறை டெஸ்டினி 125-லும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 9 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 10.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என.

சிவிடி கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125), டிவிஎஸ் என்டார்க் 125 (TVS NTorq 125), சுஸுகி அக்செஸ் 125 (Suzuki Avenis 15) மற்றும் யமஹா ரே இசட்ஆர் 125 (Yamaha Ray ZR 125) உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக மாறும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் அதன் ஜுபிடர் 110 ஸ்கூட்டர் மாடலின் அப்டேட் வெர்ஷனை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்திய ஸ்கூட்டர் பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஹீரோ நிறுவனம் அதன் டெஸ்டினி 125 மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 11:30 [IST]
English summary
New gen hero destini 125 teaser out led lighting scooter design revealed
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+