மைலேஜை வாரி வழங்கும் புது ஸ்பிளெண்டர் பைக்கின் விலை இவ்ளோதானா! ஹோண்டா ஷைனை இனி யாரும் சீண்ட கூட மாட்டாங்க!

புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 (Hero Splendor Plus Xtec 2.0) பைக் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 82,911 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 100 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 7.09 பிஹெச்பி பவர் மற்றும் 8.05 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2 பக்கமும் ட்ரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த புதிய பைக்கில் யூஎஸ்பி சார்ஜர் வசதியும் இடம்பெற்றுள்ளது.

Hero Splendor Plus Xtec 2 0

இவை எல்லாம் தவிர, ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் கூடிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வசதியும், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஹெட்லைட் அம்சமும், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கில் இடம்பெற்றுள்ளது.

பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, இந்திய சந்தையில் புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக்கின் விலை 3 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும். விற்பனையில் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்குடன், புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக் போட்டியிடும்.

Hero Splendor Plus Xtec 2 0 Side Design

ஹோண்டா ஷைன் 100 பைக்கானது, வெகு சமீபத்தில்தான் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் இனி வரும் நாட்களில் புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக் மூலம், ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு விற்பனையில் நெருக்கடி ஏற்படலாம்.

இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் மிக அதிகமாக விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

அதை சிறப்பிக்கும் விதமாகவே, புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான பாதுகாப்பை வழங்கும் வகையில், ஹசார்டு லைட் வசதியும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் உடன், i3S தொழில்நுட்ப வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு லிட்டருக்கு 73 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் தரமான மற்றும் அதே நேரத்தில் சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, புத்தம் புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 பைக் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2024, 23:55 [IST]
English summary
New hero splendor plus xtec 2 0 launched in india all details here
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+