இலவசம்னா நம்மா ஆளுங்க குவிஞ்சிருவாங்களே! 5 வருட வாரண்டி, 1 ஆண்டுக்கான சாலையோர உதவியும் இலவசம்..

முன்னணி பைக் உற்பத்தி நிறுவனமான கேடிஎம் (KTM) இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சில சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. புதிய பைக்குகளை வாங்குபவர்களுக்கு கூட்டப்பட்ட வாரண்டி (Extended Warranty) திட்டத்தையும், ரோடு-சைடு அசிஸ்டன்ஸ் (Roadside Assistance) திட்டங்களையே அது இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

இந்த திட்டம் கேடிஎம் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மட்டுமல்ல ஹஸ்க்வர்னா (Husqvarna) தயாரிப்பு (பைக் மாடல்)களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்தாண்டுகள் வாரண்டி திட்டத்தையே இலவசமாக வழங்க இருக்கின்றன கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா. ஏப்ரல் 1க்கு பின்னர் பைக்கை வாங்கிய அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ktm and husqvarna announced free

வழக்கமாக 2 ஆண்டுகள் மற்றும் 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வாரண்டியையே கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இப்போது புதிதாக பைக் வாங்குபவர்களுக்கு இத்துடன் சேர்த்து 3 ஆண்டுகள் மற்றும் 45 ஆயிரம் கிலோ மீட்டர்கள் கூட்டப்பட்ட வாரண்டியையும் இரு நிறுவனங்களும் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன.

வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவையை வழங்கும் பொருட்டே இந்த கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தை கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா அறிவித்து இருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களையும் அது கவர முடியும் என நம்புகின்றது. குறிப்பாக, ரிப்பேருக்கு ஆகும் செலவை இது மிகப் பெரிய அளவில் குறைக்க உதவும்.

Husqvarna announced free

ஆகையால், வாடிக்கையாளர்கள் இந்த கவர்ச்சியான திட்டத்தின்கீழ் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்துடன் சேர்த்தே கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா இரண்டு நிறுவனங்களும் இலவச ரோடு-சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை ஒராண்டுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. இதன் வாயிலாக 24 மணி நேர சேவையை அனைத்து நாட்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக, நீங்கள் வைத்திருக்கும் கேடிஎம் பைக் திடீரென சாலையில் பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்ராகிவிட்டாலோ ரோடு சைடு அசிஸ்டன்ஸின் உதவியை உடனடியாக நாடி உங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும். உடனடியாக உங்களுக்கு அழைப்பிற்கு செவி சாய்க்கப்பட்டு தீர்வு வழங்கப்படும். இது பாதுகாப்பான சேவை ஆகும்.

சிறிய வேலை என்றால் சம்பவ இடத்திலேயே சரி பார்த்துவிடப்படும். ஆனால், தீர்க்க முடியாத பிரச்னையாக இருந்தால் ரோடு-சைடு அசிஸ்டன்ஸ் உதவியாளர் உங்களை பத்திரமான இடத்தில் சேர்த்துவிட்டு, வாகனத்தை சரி செய்வதற்காக சர்வீஸ் மையத்திற்கு எடுத்துச் செல்வார். இத்தகைய சூப்பரான திட்டத்தையே ஒரு வருடத்திற்கு இலவசமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பிராண்டுகள் தெரிவித்து இருக்கின்றன.

இப்போதைய நிலவரப்படி கேடிஎம் பிராண்டின்கீழ் 12 மாடல் பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நேக்கட் (Naked), சூப்பர் ஸ்போர்ட் (Super Sport) மற்றும் டிராவல் (Travel) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அவை விற்கப்படுகின்றன. இதில், நேக்கட் பிரிவின்கீழ் 390 ட்யூக் (390 Duke), 250 ட்யூக் (250 Duke), 200 ட்யூக் (200 Duke), 125 ட்யூக் (125 Duke) ஆகிய நான்கு பைக் மாடல்களே கேடிஎம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், சூப்பர் ஸ்போர்ட் பிரிவன்கீழ் ஆர்சி ஜிபி (RC GP), ஆர்சி 390 (RC390), ஆர்சி 200 (RC200) மற்றும் ஆர்சி 125 ((RC 125) ஆகிய 4பைக் மாடல்களையும், டிராவல் பிரிவின்கீழ் 2023 390 அட்வென்சர் (390 Adventure), 390 அட்வென்சர் (390 Adventure), 390 அட்வென்சர் எக்ஸ் (390 Adventure X), 250 அட்வென்சர் (250 Adventure) ஆகிய 4பைக் மாடல்களையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ஹஸ்க்வர்னா பிராண்டின் கீழ் ஸ்வர்ட்பிளன் 401 (Svartpilen 401) மற்றும் விட்பிளன் 250 (Vitpilen 250) எனும் இரண்டு பைக் மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு பிராண்டுகளின் தயாரிப்புகளும் காஸ்ட்லியான பிரீமியம் தர மோட்டார்சைக்கிள்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு கூட்டப்பட்ட வாரண்டி மற்றும் சாலையோர உதவியை வழங்கும் திட்டத்தை இலவசமாக அறிவித்து இருக்கின்றன. எனவே வரும் நாட்களில் இரண்டு நிறுவனங்களும் லேசான விற்பனை வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 19:33 [IST]
English summary
New ktm and husqvarna bike buyers will get extended warranty and road side assistance free
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+