டிவிஎஸ் களமிறக்கிய புதிய ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எழுதி வெச்சுக்கோங்க! 1 கோடி பேர் வாங்க போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் 110 (TVS Jupiter 110). இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடல் இன்று (ஆகஸ்ட் 22) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல், சற்று நேரத்திற்கு முன்னதாக இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஸ்கூட்டர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில், 113.3 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஹெச்பி பவர் மற்றும் 9.8 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

TVS Jupiter 110

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இன்ஜின் உடன், புதிய ஐகோ அஸிஸ்ட் (iGO Assist) வசதியை டிவிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. நகர பகுதிகளில் 'ஓவர்டேக்' செய்யும்போது, சற்று அதிக டார்க் திறனை வழங்குவதற்கு இந்த புதிய வசதி உதவி செய்யும்.

நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள டார்க் அவுட்புட் ஐகோ அஸிஸ்ட் வசதியுடன் கிடைக்க கூடியது ஆகும். ஐகோ அஸிஸ்ட் இல்லாவிட்டால், டார்க் அவுட்புட் 9.2 என்எம் ஆக இருக்கும். புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

TVS Jupiter 110 Side Design

அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டர் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) களமிறக்கப்பட்டுள்ளது. ரைடருக்கு பல்வேறு தகவல்களை வழங்க கூடிய எல்இடி டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என ஏராளமான வசதிகளை எல்லாம் புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே 2 ஹெல்மெட்களை வைத்து கொள்ள முடியும். இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் எரிபொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் இருக்கையை தூக்கி கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இந்த புதிய ஸ்கூட்டரில் இல்லை.

ஏனெனில் எரிபொருள் நிரப்புவதற்கான 'கேப்' வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 73,700 ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

அதே நேரத்தில் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் மற்ற வேரியண்ட்களின் விலை வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Honda Activa 6G) ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக, புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 11 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை, 65 லட்சத்திற்கும் மேற்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கையில், 110 சிசி மற்றும் 125 சிசி என 2 வெர்ஷன்களும் அடங்கும். இந்த சூழலில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் புதிய மாடல், ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கு உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் 1 கோடி என்ற பிரம்மாண்டமான எண்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட சாதனையை படைப்பதற்கான வாய்ப்புகளை, புதிதாக களமிறக்கப்பட்டுள்ள டிவிஎஸ் ஜூபிடர் 110 வெர்ஷன் அதிகரித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2024, 13:17 [IST]
English summary
New tvs jupiter 110 launched in india price features engine all details
மேலும்... #tvs motor #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+