ஷோரூம்களுக்கு வர தொடங்கிய டிவிஎஸ் ஜுபிடர் 110! முக்கியமான இடமா பாத்து நிக்க வச்சிருக்காங்க!..

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிவிஎஸ் (TVS) நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஜுபிடர் 110 (Jupiter 110) ஸ்கூட்டரை இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டரே தற்போது ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய ஜுபிடர் 110 ஸ்கூட்டர் ஷோரூம்களில் கெத்தாக நின்றுக் கொண்டிருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த ஸ்கூட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷோரூம் நிர்வாகம் முக்கிய பகுதிகளில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.

இதைக் காட்டக் கூடிய படங்களே தற்போது வெளியாகி உள்ளன. குறிப்பாக, நிகழ்ச்சி மேடையைப் போல அந்த இடம் அலங்கரிக்கப்பட்டு புதிய ஜுபிடர் 110 நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதுவே பலரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்து வருகின்றது. எனவே வரும் நாட்களில் விற்பனையிலும் இந்த ஸ்கூட்டர் கெத்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TVS jupiter 110 arrives showroom

ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் (Hero Pleasure Plus) ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாகவே ஜுபிடர் 110 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே ஜுபிடர் 110 மாடலின் அப்டேட் வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையிலேயே ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. மிக முக்கியமான மாற்றமாக ஸ்கூட்டரின் அலங்காரம் உள்ளது. இது ஜுபிடர் 110 ஸ்கூட்டர்தான் என சொல்ல முடியாத அளவிற்கே மாற்றங்களை டிவிஎஸ் செய்திருக்கின்றது. புதிய பாடி பேனல், புதிய ஹெட்லைட், புதிய டிஆர்எல் லைட் மற்றும் இன்டிகேட்டர் லைட் ஆகியவையே ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Tvs jupiter 110 in showroom

இதுதவிர, எரிபொருளை சுலபமாக நிரப்பிக் கொள்ள ஏதுவாக அதன் வாய் பகுதியை முன் பக்கத்தில் ஹேண்டில் பாருக்கு கீழே வழங்கி இருக்கின்றனர். தொடர்ந்து, எரிபொருள் தொட்டியையும் கால் வைக்கும் இடத்திற்கு அடிப் பகுதியில் வழங்கி உள்ளனர். இதனால் இருக்கைக்கு அடியில் காணப்படும் ஸ்டோரேஜ் மிக தாராளமானதாக மாறியிருக்கின்றது.

ரெண்டு ஹெல்மெட்டைக் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால், முழு முக ஹெல்மெட்டை இரண்டு வைப்பது சற்று சிரமம் என தெரிகின்றது. 33 லிட்டர் ஸ்டோரேஜையே அது கொண்டிருக்கின்றது. இதுபோன்ற அசத்தலான மாற்றங்களையே இந்த ஸ்கூட்டரில் டிவிஎஸ் செய்திருக்கின்றது. மேலும் விலையும் சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Tvs jupiter 110 in showroom side view

Source: Image 1 and 2 அந்தவகையில், இதன் ஆரம்ப நிலை தேர்விற்கு ரூ. 73,700 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் இந்த ஸ்கூட்டரை டிவிஎஸ் விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. டிரம் (Drum), டிரம் அலாய் (Drum Alloy), ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் (SmartXonnect Drum) மற்றும் ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் டிஸ்க் (SmartXonnect Disc) ஆகியவையே அவை ஆகும்.

இதில் டிரம் மற்றும் டிஸ்க் என்பது பிரேக்கிங் செட்-அப்பையும், அலாய் என்பது வீலையும், ஸ்மார்ட்-எக்ஸோன்னக்ட் என்பது அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சத்தையும் குறிக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் திரை, திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் நோடிஃபிகேஷனைக் காணும் வசதி ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் வாய்ஸ் அசிஸ்ட் அம்சமும் புதிய ஜுபிடர் 110 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், 'ஃபாலோ மீ ஹெட்லேம்ப்' (Follow Me Headlamp) மற்றும் 'ஃபைண்டு மீ' (Find me) ஆகிய அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் பாதுகாப்பு வசதியாக ரேபிட் ஃப்ளாஷிங் தொழில்நுட்பமும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது அனைத்து மின் விளக்குகளையும் வேகமாக ஒளிரச் செய்து மற்ற வாகன ஓட்டிகளை எச்சரிக்கச் செய்யும். எஞ்சினைப் பொருத்த வரை புதிய ஜுபிடர் 100 ஸ்கூட்டரில் 113 சிசி திறன் கொண்ட மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8 எச்பி மற்றும் 9.8 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், இந்த மோட்டாருடன் சேர்த்து ஐகோ அசிஸ்ட் அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகும். எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டிவிஎஸ் ஜுபிடர் 110 ஸ்கூட்டர் ஷோரூம்களில் கெத்தாக காட்சியளிப்பது அதன் போட்டி மாடல்களை கதிகலங்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, இதன் வருகை ஆக்டிவாவின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என நம்பப்படுகின்றது. இதன் டெலிவரி பணிகள் விரைவிலேயே தொடங்கப்படு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 5:00 [IST]
English summary
New tvs jupiter 110 scooter arrives at dealerships showroom deliveries start soon
மேலும்... #tvs motor #2024 TVS Jupiter 110 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X