போட்டினு சொல்லிட்டு இருக்கவங்க எல்லாம் கதறியோட போறாங்க.. மார்கெட்டை ஒரு கை பார்க்க போகுது நம்ம பஜாஜ்..

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), வெகு விரைவில் இந்திய இரண்டு சக்கர வாகன சந்தையை அதகளப்படுத்தும் விதமாக பலதரப்பட்ட புதிய டூ-வீலர் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)-வும் ஒன்று. இந்த நிறுவனம் இந்தியாவின் இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக மிகப் பெரிய எண்ணிக்கையில் புதுமுக வாகனங்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது.

Bajaj auot

ஓர் குடுவையில் கலவையான பழத் துண்டுகளை வழங்குவதைப் போல, இந்த 2024-25 நிதியாண்டில் அது ஐசிஇ (internal combustion engine), எலெக்ட்ரிக் வாகனம் (Electric Vehicle) மற்றும் சிஎன்ஜி (CNG) என வெவ்வேறு விதமான திறன்கள் கொண்ட இரண்டு சக்கர வாகனங்களையே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

பெட்ரோல் இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக ஆறு புதிய பல்சர் (Pulsar) பைக் மாடல்களையும், இத்துடன், ஒரு மலிவு விலை சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Chetak Electric Scooter) தேர்வையும் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இத்துடன் சேர்த்து சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் ஒன்றையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவே உலகின் முதல் சிஎன்ஜி பைக் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் அதன் புகழ்பெற்ற பைக் மாடல்களில் ஒன்றான பிளாட்டினா-விலேயே சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் பெட்ரோல் விலை மிக உச்சத்தில் இருக்கின்றது. இதனால்தான் பலர் தற்போது எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே மக்களின் கவனத்தை சிஎன்ஜி பக்கம் திருப்பும் விதமாக பஜாஜ் ஆட்டோ ஓர் சிஎன்ஜி பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது.

இத்துடன் சேர்த்தே ஆறு புதிய பல்சர் பைக் மாடல்களையும், சேத்தக்கின் விலை குறைவான ஆப்ஷனையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலும், போட்டியாளர்களுக்கு கூடுதல் கடுமையான போட்டியை வழங்கும் நோக்கிலேயே பல்சர் வரிசையில் ஆறு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இதேபோல், அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பட்ஜெட் விலையில் பஜாஜின் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேத்தக்கும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களை மட்டுமில்லைங்க ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களையும் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோக்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், விரைவில் சிஎன்ஜியில் இயங்கும் டூவீலரையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்தவகையில், பஜாஜ் ஹைட்ரஜனில் இயங்கும் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனம் இந்தியாவையே ஒட்டுமொத்தமாக தன் வசம் ஈர்க்கும் விதமாக இந்த மிகப் பெரிய எண்ணிக்கையில் அது புதிய டூ-வீலர்களை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனத்தின் பல்சர், சேத்தக் இந்த இரண்டும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை புதிய மாடல்கள் இரட்டிப்பாக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 15:02 [IST]
English summary
New two wheeler models from bajaj waiting in line to launch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+