ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை மொத்தமா காலி பண்ண போகும் புது பைக்!! உருவாக்குவது யார்னு தெரியுமா?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளுக்கு போட்டியாக யெஸ்டி (Yezdi) நிறுவனம் உருவாக்கும் புதிய ரோட் கிங் பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 'கிளாசிக் ஜாவா' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த படங்களையும், இந்த புதிய யெஸ்டி பைக்கை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
கம்மியான விலையிலான பைக்குகளை விற்பனை செய்யாவிடினும், இந்தியாவின் டாப்-10 பைக் நிறுவனங்களுள் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் தரமும், அவற்றின் செயல்படுதிறனும் ஆகும். இதன் காரணமாக, வாங்கினால் ராயல் என்ஃபீல்டு பைக்கை மட்டுமே வாங்கிவேன் என பிடிவாதமாக இருப்பவர்களும் உள்ளனர்.

ஹண்டர் 350 பைக் மூலமாக தனது பைக்குகள் வடிவமைப்பில் புதிய பாணியை கொண்டுவந்திருக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக பைக்கை களமிறக்குவது சாதாரண விஷயம் அல்ல. பைக்குகள் உற்பத்தியிலும், விற்பனையிலும் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக ஒரு நிறுவனம் இருக்க முடியும் என்றால், அது யெஸ்டி தான்.
ராயல் என்ஃபீல்டை போல் நீண்ட காலமாக பைக்குகள் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் யெஸ்டி நிறுவனம், ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும் அதன் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. அடுத்ததாக இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய சில பைக்குகள் யெஸ்டி நிறுவனத்தின் யோசனையில் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், யெஸ்டி ரோட் கிங் ஆகும்.

'யெஸ்டி ரோட் கிங்' பெயர் ஒன்றும் இந்திய மார்க்கெட்டிற்கு புதியது அல்ல. 1970ஆம் காலக்கட்டத்தில் இருந்து 90ஆம் காலக்கட்டம் வரையில் யெஸ்டி ரோட் கிங் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவில் யெஸ்டி பைக் பிராண்டிற்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த பைக் ரோட் கிங் ஆகும். இதனால்தான், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் ரோட் கிங் ஸ்டைலில் ஒரு பைக்கை அறிமுகம் செய்ய யெஸ்டி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், யெஸ்டி ரோட் கிங் என்கிற பெயரில் சிவப்பு நிறத்திலான யெஸ்டி பைக் ஒன்றின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பழைய யெஸ்டி ரோட் கிங் பைக்கில் பெட்ரோல் டேங்க் பகுதி கொஞ்சம் மேடாக இருக்கும். பழைய யெஸ்டி ரோட் கிங் பைக்கை பார்த்தவர்களுக்கு அது தெரிந்திருக்கும். அதேபோல், தற்போது நமக்கு கிடைத்துள்ள படத்திலும் பைக்கின் பெட்ரோல் டேங்க் சற்று மேடாக உள்ளது.

இணையத்தில் கசிந்துள்ள இந்த படங்களில் பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டு இருப்பதை காணலாம். அதேபோல், ட்வின் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலையும் காண முடிகிறது. இப்போதுவரும் மாடர்ன் பைக்குகளில் ட்வின் பேட் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுவதில்லை. இதன் மூலம், இது யெஸ்டி ரோட் கிங் பைக் தானா? என்கிற சந்தேகம் மேலும் அதிகமாகிறது. ஒருவேளை இது யெஸ்டி ரோட் கிங் பைக்கின் மாடர்ன் வெர்சனாக இருந்தாலும், நிச்சயமாக டிஜிட்டல் டிஸ்பிளே ஆப்ஷனும் வழங்கப்படும்.
பைக்கின் பின்பக்கம் சிறியதாக உள்ளது. அதேபோல், பழைய கிளாசிக் பைக்குகளில் இருப்பதை போல் இந்த பைக்கில் சிங்கிள் பீஸில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாடர்ன் டிசைனுக்காக கருப்பு நிறத்தில் 2-ஸ்போக் அலாய் சக்கரங்கள் இந்த பைக்கில் உள்ளன. படத்தில் பைக்கின் தோற்றத்தை வைத்து பார்த்தால், இது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளுக்கு விற்பனையில் போட்டியாக இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிளாசிக் & மாடர்ன் என இரண்டும் சரியான கலவையில் கலந்த மோட்டார்சைக்கிளாக இந்த புதிய யெஸ்டி பைக் தோற்றமளிக்கிறது. இருப்பினும், ராயல் என்ஃபீல்டு போன்ற ஒரு ஜாம்பவானை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்றால், பைக்கின் விலை மிக முக்கியமானது ஆகும். ஆதலால், இந்த புதிய பைக்கின் விலையை இந்தியாவில் எவ்வளவாக யெஸ்டி நிர்ணயிக்கவுள்ளது என்பதை பொருத்துதான் இந்த பைக்கின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.
Image Source: Classic Jawa


Click it and Unblock the Notifications









