வெறும் ரூ36,990க்கு எலெக்ட்ரிக் டூவீலரை வெளியிட்ட நிறுவனம்! கூட்டம் குவிய போகுது!

நெக்ஸ்ஜென் எனர்ஜியா என்ற நிறுவனம் தற்போது ரூபாய் 36,990 என்ற விலையில் புதிய எலெக்ட்ரிக் டூவீலர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நடிகர் சுனில் ஷெட்டி இந்த எலெக்ட்ரிக் டூவீலரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த நிறுவனம் எப்படி செயல்படுகிறது? இந்த நிறுவனத்தின் திட்டம் என்ன? இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் டூவீலர் குறித்த அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.

நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் நெக்ஸ்ஜென் எனர்ஜியா இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் டூ வீலரை நேற்று வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூபாய் 36,990 என்ற விலையில் இந்த எலெக்ட்ரிக் டூவீலர் அறிமுகம் ஆகியுள்ளது.

nexgen energia affordable ev

நடிகர் சுனில்ஷெட்டி தான் இந்த எலெக்ட்ரிக் டூவீலரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த எலெக்ட்ரிக் டூவீலர் அறிமுகப்படுத்தி வைத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி: " எலெக்ட்ரிக் வாகனங்களை குறைவான விலையில் எளிய மக்களும் வாங்கும் வகையில், தயாரிப்புகளை உருவாக்க எங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ36,990 என்ற விலையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் டூவீலர்கள் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் சேர்மன் பியூஸ் கூறும்போது: " எங்கள் நிறுவனத்தின் நோக்கம் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாங்கும் அளவிற்கு குறைவான விலையில் இருக்க வேண்டும் என்பது தான். அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து வசதியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எங்கள் நிறுவனம் இந்த நிதியாண்டில் சுமார் 500 கோடி அளவிற்கு பண பரிமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். எதற்காக இந்தியா முழுவதும் 500 டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் 50,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வழங்க உள்ளோம். எலெக்ட்ரிக் வாகன செக்டார் இந்தியாவின் எதிர்காலமாக மாறி உள்ளது.

தற்போது டூவீலர் செக்மெண்டில் நாங்கள் கால் பதித்துள்ள நிலையில் விரைவில் எலெக்ட்ரிக் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்தால் ரூபாய் 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவோம். இதன் மூலம் மிடில் கிளாஸ் மக்களும் சுலபமாக கார் வாங்க முடியும்" என்று கூறினார்.

நெஸ் ஜென் எனர்ஜியா நிறுவனம் சொன்னது படி ரூபாய் 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தால், உலகின் குறைந்த விலை எலெக்ட்ரிக் காராக இதுதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தான் இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தான் இந்நிறுவனத்திற்கு ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து இந்நிறுவனம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தனது ஆலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் அரசுடன் கவுட்டா தொழிற்சாலை மையம் அல்லது காஷ்மீர் வேலி பகுதியில் 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்க மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விரைவில் இந்த ஆலயம் அமைந்த உடன் இந்நிறுவனம் வெளியிடும் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் கார் குறித்த தயாரிப்புகள் மற்றும் ஆய்வுகள் எல்லாம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை வெகுவாக குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் குறைவான விலையில் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறைவான விலைக்கு விற்பனைக்கு வரும். அதற்கு இந்நிறுவனம் தனது முதல் படியை எடுத்து வைக்கும் என எதிர்பார்க்கலாம். இன்னும் ஒரு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2024, 12:39 [IST]
English summary
Nexgen energia affordable ev launches electric two wheeler 36990
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+