மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மிக பெரிய தள்ளுபடி அறிவிப்பு.. 10 நாளைக்கு மட்டும்தான் அறிவிச்சு இருக்கு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று அனைத்துலக பெண்கள் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடடப்படுகின்றது. இந்த நாளை சிறப்பிக்கும் விதமாக முன்னணி நிறுவனங்கள் பெண்களுக்கு ஆஃபரை அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், நெக்ஸு மொபிலிட்டி (Nexzu Mobility) நிறுவனம் மாபெரும் விலை தள்ளுபடியை பெண்களுக்காக அறிவித்து இருக்கின்றது.

இது ஓர் குறுகிய கால சலுகை ஆகும். ரோம்பஸ் பிளஸ் (Rompus Plus) மற்றும் பசிங்கா (Bazinga) ஆகிய எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கே நெக்ஸூ சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ரூ. 32,750க்கு ரோம்பஸ் பிளஸ் எலெக்ட்ரிக் சைக்கிள் விற்கப்படுகின்றது.

Nexzu announced special offer for womens

இந்த விலைக் கொண்ட இ-சைக்கிளை பெண்களுக்கு ரூ. 29,750க்கு விற்பனைக்கு வழங்கவே நெக்ஸு திட்டமிட்டுள்ளது. அதாவது, ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி விலையி்ல் எலெக்ட்ரிக் சைக்கிளை பெண்களுக்கு மகளிர் தின சிறப்பு கொண்டாட்டமாக வழங்க இருக்கின்றது. இதேபோல், நெக்ஸு பசிங்கா எலெக்ட்ரிக் சைக்கிளுக்கும் ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த சைக்கிள் வழக்கமான நிலையில் ரூ. 44,500க்கு விற்கப்படுகின்றது, விலை குறைப்பால் இது தற்போது 41,500க்கு விற்கப்படுகின்றது. ஆனால், பெண்களுக்கு மட்டுமே இந்த விலையில் நெக்ஸு விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. பசிங்கா இ-சைக்கிளில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.

இதற்காக மின்சார மிதிவண்டியில் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் ஆகும். நெக்ஸுவின் எலெக்ட்ரிக் சைக்கிளை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் ஓட்டிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரு பாலரும் பயனடையும் வகையிலேயே நெக்ஸூ மொபிலிட்டி அதன் இ-சைக்கிள்களை தயார் செய்திருக்கின்றது.

ரோம்பஸ் பிளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளில் ஓர் முழு சார்ஜில் 37 கிமீ ரேஞ்ஜை வழங்கும். பெடல் அசிஸ்ட்டுடனேயே இந்த ரேஞ்ஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளையில், த்ரோட்டில் மோடில் 33 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும். இந்த ரேஞ்ஜிற்காக 5.2 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். டயரைப் பொருத்த வரை 26 அங்குல நைலான் டயரே ரோம்பஸ் பிளஸ் இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அகலமான மற்றும் நல்ல பிடிமானத்தை வழங்கும் வசதிக் கொண்ட டயர் ஆகும். எந்தமாதிரியான சாலையாக இது அசால்டு செய்துவிடும்.

சிவப்பு, கருப்பு மற்றும் நீலம் ஆகிய வண்ண ஆப்ஷன்களே ரோம்பஸ் பிளஸ் மாடலுக்கு வழங்கப்படுகின்றது. இத்துடன், டிஸ்க் பிரேக், சஸ்பென்ஷன் மற்றும் எல்இடி லைட் ஆகியவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அசௌகரியமான ரைடு உணர்வை தவிர்க்கும் பொருட்டே இந்த அம்சங்களை நெக்ஸு நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

பசிங்கா, இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ஏற்கனவே கூறியதைப் போல் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதற்காக, 14.5Ah லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். பெடலெக் மற்றும் ஃபுல் த்ரோட்டில் என இரண்டு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், ஆன்டி ஸ்கிட் பெடல் மற்றும் அட்வான்ஸ்டு டிஸ்க் பிரேக்குகளையும் பசிங்காவில் நெக்ஸூ வழங்கி இருக்கின்றது. டயரை பொருத்த வரை ரோம்பஸ் பிளஸ் மற்றும் பசிங்கா இரண்டும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இதேபோல் நிற தேர்விலும் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றன. இத்துடன், ஹெட்லேம்ப், ஹாரன், ஆட்டோ எலெக்ட்ரிக் கட்-ஆஃப் அம்சம் ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இ-சைக்கிள்களுக்கும் மின்வாகன ஆர்வலர்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பெண் மின்சார வாகன ஆர்வலர்களைக் கவரும் பொருட்டு நெக்ஸு மகளிர் தின சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 8, 2024, 5:03 [IST]
English summary
Nexzu mobility announced womens day special offer for womens
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+