ரூ.90,000க்கு இந்த எலக்ட்ரிக் பைக்கை கண்ணை மூடிட்டு வாங்கலாம் - மற்றவர்களுக்கு முன் நீங்க வாங்கி போடுங்க!!

ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric), இந்தியாவின் உள்நாட்டு எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் ஒபென் ரோர் (Rorr) எலக்ட்ரிக் பைக்கிற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு தசரா பண்டிகையை முன்னிட்டு ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, எவ்வளவு குறைவான விலையில் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம் என்பதையும், இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கிவிட்டாலே சலுகைகளும், தள்ளுபடிகளும் குவிய துவங்கிவிடும். இந்தியாவின் மிக பெரும் கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வரையில் அவற்றின் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. போதாக்குறைக்கு ஃப்ளிப்கார்ட்டிலும் இரு சக்கர வாகனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதை சமீபத்தில் பார்த்திருந்தோம்.

oben electric announces festival offers

இந்த வரிசையில், இந்தியாவின் பிரபலமான 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றான ஒபென் எலக்ட்ரிக்கும் அதன் ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கு சூப்பரான பணம் தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, சுமார் ரூ.30,000 பணம் தள்ளுபடி உடன் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். அதாவது, ரூ.1,49,999க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் பைக் இனி ரூ.1,19,999-க்கு கிடைக்கும்.

அத்துடன், ஒவ்வொரு ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கும் 5 வருடத்திற்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை பெறலாம். மேலும், ரோர் எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஐபோன் 15, ஐபேட் மினி அல்லது சோனி ஹெட்போன்களை வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த சலுகைகளை பெறுவதற்கு நீங்கள் செப்டம்பர் 29 - அக்டோபர் 12ஆம் தேதிகளுக்குள் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கை வாங்க வேண்டும்.

oben electric announces festival offers

இந்த சலுகைகள் மட்டுமின்றி ஸ்பெஷல் தசரா டே என்கிற ஒருநாள் சலுகை திட்டத்தையும் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் அதன் பெங்களூர், டெல்லி மற்றும் புனே ஷோரூம்களில் அமல்படுத்த உள்ளது. இதன்படி, பெங்களூரில் உள்ள எச்.எஸ்.ஆர் லேஅவுட் ஷோரூமில் செப்டம்பர் 29ஆம் தேதியிலும், டெல்லி துவார்கா ஷோரூமில் அக்டோபர் 2ஆம் தேதியிலும், புனே வாகாட் ஷோரூமில் அக்டோபர் 6ஆம் தேதியிலும் ரோர் எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.30,000 என்கிற அதிர்ஷ்ட குலுக்கல் பரிசை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

அதாவது, குறிப்பிட்ட தேதிகளில் குறிப்பிட்ட ஷோரூம்களுக்கு செல்லும் குறிப்பிட்ட சில அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் ரூ.60,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம். அந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.89,999 மட்டுமே ஆகும். இந்த பண்டிகை கால சலுகைகளுக்கு மத்தியில், நாட்டில் சேல்ஸ் நெட்வொர்க்கையும் விரிவுப்படுத்த ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது.

oben electric announces festival offers

இதன்படி, வரும் மாதங்களில் புதியதாக 60 ஷோரூம்களை திறக்க ஒபென் எலக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. தற்சமயம் ஒபென் எலக்ட்ரிக்கின் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் ஆனது பெங்களூர், டெல்லி மற்றும் புனே நகரங்களில் மட்டுமே வலிமையானதாக உள்ளது. கேரளாவிலும் ஓரளவிற்கு பெரிய மார்க்கெட்டை ஒபென் எலக்ட்ரிக் கொண்டு உள்ளது.

ஒபென் எலக்ட்ரிக் உருவாக்கும் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி ஆனது சிறந்த பெர்ஃபார்மன்ஸ், 50% குறைவாக வெப்பமடைவது மற்றும் அதிகமான ஆயுட்காலத்தை வழங்கக்கூடியதாக உள்ளது. ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்டது. இந்தியாவில் தற்சமயம் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பெரிய மார்க்கெட்டை கொண்டுள்ள மிகவும் சில நிறுவனங்களுள் ஒபென் எலக்ட்ரிக்கும் ஒன்றாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், ரோர் பைக் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக இந்த பைக்கிற்கு பண்டிகை கால சலுகைகளை ஒபென் எலக்ட்ரிக் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம் மையத்தை தொடர்பு கொள்ளவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2024, 23:59 [IST]
English summary
Oben electric announces festival offers for rorr electric bike check all details here
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X