ரூ.20,000 கம்மியான விலையில் எலக்ட்ரிக் பைக்... சலுகை கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே!! எங்கு தெரியுமா?

ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric), சமீப காலத்தில் இந்தியா முழுவதும் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ள ஓர் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம். சமீபத்தில் கூட டெல்லியில் புது டீலர்ஷிப் ஷோரூமை திறந்து இருந்தது. இந்த நிலையில் புனேவில் புது ஷோரூமை ஒபென் எலக்ட்ரிக் திறந்துள்ளது. டெல்லியில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டதை போன்று, தற்போது புனேவில் புது ஷோரூமை திறந்துள்ளதை முன்னிட்டும் அட்டகாசமான சலுகைகளை ஒபென் எலக்ட்ரிக் அறிவித்துள்ளது. அந்த சலுகைகள் என்ன? ஒபென் எலக்ட்ரிக்கில் இருந்து விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் 2-வீலர்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால் மிகவும் சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அத்தகைய சில நிறுவனங்களுள் ஒன்று ஒபென் எலக்ட்ரிக் ஆகும். குறிப்பாக, செயல்திறன்மிக்க எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்வதில் ஒபென் எலக்ட்ரிக் நிபுணத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

oben electric launches new showroom

ஒபென் எலக்ட்ரிக் பைக்குகள் குறிப்பாக, இளம் தலைமுறையினரை கவரும் விதத்தில் உள்ளன. இதனால், முடிந்தவரையில் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் தனது எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதில் ஒபென் எலக்ட்ரிக் தீவிரமாக உள்ளது. அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் புது ஷோரூமை திறந்த இந்த இவி நிறுவனம் தற்போது புனேவில் ஷோரூமை திறந்துள்ளது.

டெல்லியில் ஷோரூமை திறந்த சமயத்தில் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கு அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதேபோன்று, தற்போது புனேவிலும் ஸ்பெஷல் சலுகை ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.49 லட்சமாக உள்ளது. ஆனால், புனேவில் புதிய ஷோரூம் திறப்பை முன்னிட்டு பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.29 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

oben electric launches new showroom

இந்த சலுகை விலை ஆனது முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஆகும். இந்த ஷோரூமை தொடர்ந்து மேலும் சில ஷோரூம்களையும் புனேவில் திறக்க ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் மேலும் 6 ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களை நிறுவ ஒபென் ரோர் முடிவெடுத்துள்ளது. பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ளதை போன்று பிரீமியம் தரத்திலான ஷோரூமாக இதனை ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கிற்கு நிறைய புக்கிங்குகள் குவிக்கின்றன. 8 கிலோவாட்ஸ் மோட்டார் பொருத்தப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு 100kmph ஆகும். இந்த பைக்கில் வழங்கப்படும் எல்.எஃப்.பி செல் டெக்னாலஜி ஆனது அதிகமான பேட்டரி ஆயுட்காலத்திற்கும், வெப்பம் ஏற்படுவதை தடுப்பதற்கும் பயன்படுகிறது.

இதன் மூலமாக பாதுகாப்பான எலக்ட்ரிக் பைக்காக விளங்கும் ஒபென் ரோரின் ரேஞ்ச் 187கிமீ ஆகும். புனேவில் திறந்திருப்பதை போன்று, இந்த வருடத்திற்கு உள்ளாக இந்தியாவில் மேலும் 12 நகரங்களில் 50 ஷோரூம் மையங்களை நிறுவ ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த இவி நிறுவனத்துக்கு பெங்களூரில் ஏற்கனவே 3 ஷோரூம் மையங்கள் உள்ளன. அதேபோல், கேரளாவிலும் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் ஷோரூம்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வட இந்தியாவில் முதல் ஷோரூமை டெல்லியில் திறந்திருக்கும் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் இப்போதுவரையில் நமது தமிழ்நாட்டில் ஷோரூமை திறக்கவில்லை. தென்னிந்தியாவில் இந்த நிறுவனம் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி வருவதால், விரைவில் தமிழ்நாட்டிலும் ஒபென் எலக்ட்ரிக்கின் ஷோரூமை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 11:29 [IST]
English summary
Oben electric launches new showroom in pune with special offer
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+