வெறும் ரூ.1.10 லட்சம் மட்டும்தான்... எலக்ட்ரிக் பைக்கை இவ்வளவு குறைவான விலையில் எங்கேயும் வாங்க முடியாது!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மற்ற நாடுகளை போன்று இந்தியாவிலும் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக்கில் ஸ்கூட்டர்களை வாங்கவே நம் நாட்டில் நிறைய பேர் விரும்புகின்றனர். ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போதைக்கு ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதால், பெரிய தொகையை எலக்ட்ரிக் வாகனங்களில் செலவு செய்ய பலர் விரும்புவதில்லை. சரி... எலக்ட்ரிக்கில் பைக்கை ஆவது நிறைய பேர் வாங்குகிறார்களா? என்றால், அதுவும் இல்லை. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகும் அளவிற்கு எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனையாகுவது இல்லை. இதனால், இந்திய மார்க்கெட்டில் எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் என்று பார்த்தால், குறைவுதான்.

அத்தகைய குறைவான எலக்ட்ரிக் பைக் நிறுவனங்களுள் ஒன்று ஒபென் எலக்ட்ரிக் (Oben Electric) ஆகும். இந்த நிறுவனத்தின் ரோர் (Rorr) எலக்ட்ரிக் பைக் நாடு முழுவதும் கணிசமான கவனத்தை பெற்றுள்ளது. இதனால், முடிந்தவரையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் ரோர் எலக்ட்ரிக் பைக்கை கொண்டு செல்வதில் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

oben electric s first delhi showroom

ஆனால், தென்னிந்தியாவில் மட்டுமே ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு ஷோரூம்கள் உள்ளன. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 7 டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. இவை ஏழும் தென்னிந்தியாவில்தான் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் 8வது டீலர்ஷிப் ஷோரூம் டெல்லியில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, வட இந்தியாவில் தனது காலடி தடத்தை ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் பதித்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் பிதாம்புரா பகுதியில் தனது ஷோரூமை ஒபென் எலக்ட்ரிக் திறந்துள்ளது. இந்த புதிய ஷோரூம் மூலமாக, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஸ்டமர்களை பெற முடியும் என்கிற நம்பிக்கையில் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் உள்ளது.

oben electric s first delhi showroom

டெல்லியில் புதிய டீலர்ஷிப் ஷோரூமை திறந்திருப்பதை கொண்டாடும் விதமாகவும், வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும் ரோர் எலக்ட்ரிக் பைக்கின் விலையை ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், இந்த எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது பெங்களூர் உள்பட மற்ற தென்னிந்திய நகரங்களில் ரூ.1.49 லட்சமாக உள்ளது.

ஆனால், டெல்லியில் ஒபென் ரோர் எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக வெறும் ரூ.1.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, டெல்லியில் திறக்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் சுமார் ரூ.39 ஆயிரம் குறைவான விலையில் இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். ஆனால், இந்த சலுகை விலை டெல்லியில் நீண்ட நாட்களுக்கு கிடைக்க போவதில்லை.

oben electric s first delhi showroom

ஏனெனில், ரோர் எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் முதல் 100 கஸ்டமர்கள் மட்டுமே இந்த சலுகை விலையை பெற முடியும் என ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பான எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்றாக விளங்கும் ஒபென் ரோரில் 8 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு 100kmph ஆகும்.

டெல்லியில் தற்போது முதல் ஷோரூமை திறந்திருக்கும் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனம் அங்கு தனது நெட்வொர்க்கை விரைவாக விரிவுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இதன்படி, இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் 12 டீலர்ஷிப் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை கொண்டிருக்க வேண்டும் என ஒபென் எலக்ட்ரிக் திட்டமிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, இந்தியாவில் எந்த பகுதியை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும், முதலாவதாக தனது சொந்த ஊரில் ஷோரூமில் திறந்துவிட்டால், அடுத்து நேராக டெல்லியில் ஷோரூமை திறக்க முயற்சிக்கும். ஏனெனில், நாட்டின் தலைநகரில் சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருப்பது மிக அவசியமாகும். இந்த விஷயத்தில் ஒபென் எலக்ட்ரிக் சற்று தாமதமாகவே செயல்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 18, 2024, 23:15 [IST]
English summary
Oben electric opens first showroom in delhi offer price announced all details here
மேலும்... #electric bike #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X