தீபாவளிக்கு புது பைக் வாங்கினவங்க எல்லாம் வருத்தப்பட போறாங்க.. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி இத அறிவிச்சிருக்கலாம்

தீபாவளியை முன்னிட்டு பலர் புதிய வாகனங்களை வாங்கி இருக்கின்றனர். இவர்கள் எல்லாரையும் வருத்தப்பட செய்கின்ற வகையில் ஓர் தகவலை பிரபல இரண்டு சக்கர வாகனம் ஒன்று வெளியிட்டு இருக்கின்றது. ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric) எனும் நிறுவனம் ரோர் ஈசி (Rorr EZ) எனும் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஓபென் ஓர் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக ரோர் (Rorr) இருக்கின்றது.

இந்த நிலையிலேயே ரோர் ஈசி எனும் மாடலையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நிறுவனம் ஓர் டீசர் வீடியோ (Teaser Video)-வை வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் வீடியோ வாயில் பைக்கை அவர்கள் முழுமையாகக் காண்பிக்கவில்லை.

Oben electric to launch rorr ez on november 7

அதன் கட்டுமஸ்தான தோற்றத்தை விவரிக்கக் கூடிய நிழற்படங்களை மட்டுமே ஓபென் தற்போது காட்சிப்படுத்தி இருக்கின்றது. வருகின்ற நவம்பர் 7 அன்றே இந்த பைக்கை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

பலர் 2024 தீபாவளியை முன்னிட்டு புதிய பைக்கை வாங்கிவிட்ட நிலையில், சற்றே தாமதமாக நவம்பர் மாதத்தில் இந்த பைக்கை நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. எனவே வரும் புத்தாண்டில் புதிய வாகனத்தை வாங்க இருப்போரின் கவனத்தை இந்த வாகனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Oben rorr ez under body

ஆனால், இந்த பைக் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களையும் ஓபென் எலெக்ட்ரிக் வெளியிடவில்லை. அறிமுகத்தின்போதே இதுபற்றிய தகவல்களை வெளியிடப்பட உள்ளன. அதேவேளையில், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாகவும், சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கக் கூடியதாகவும் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாகவும் இந்த மின்சார பைக் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாகவும் இந்த டூ-வீலர் இருக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து, உயர் செயல்பாட்டு திறன் கொண்ட எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கும் இந்த பைக்கில் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. மிக முக்கியமாக இந்த பேட்டரி வெப்பத்தை தவிர்க்கும் வசதி, நீடித்து உழைக்கும் திறன், இந்தியாவின் அனைத்து விதமான கால சூழலுக்கு ஏற்றது என பல தரப்பட்ட வசதிகளைத் தாங்கியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆகையால், தற்போது விற்பனையில் ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே புதிய ரோர் ஈசி-க்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓபென் ரோர் இந்தியாவில் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 999-க்கு விற்கப்படுகின்றது. இந்த பைக்கில் ஓர் முழு சார்ஜில் 187 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 4.4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதற்காக 8 kW திறன் கொண்ட ஐபிஎம்எஸ்எம் மின் மோட்டாரே ரோர் எலெக்ட்ரிக் பைக்கில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டாரால் வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓபென் ரோர் எலெக்ட்ரிக் பைக்கை போலவே அதிக சிறப்பம்சங்கள் தாங்கியதாக ஓபென் ரோர் ஈசி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சற்று குறைவான விலையில் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனம் இதுவென்பதால் ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினா போன்ற ஐசிஇ டூ-வீலர்களுக்கும் இதன் வருகை போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 1, 2024, 16:56 [IST]
English summary
Oben electric set to launch rorr ez e bike for city commuting on november 7
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X