இந்தியர்கள் எதிர்பார்த்த மாதிரி கம்மி விலையில் விற்பனைக்கு வந்திருக்கு! ஓலாவ வீழ்த்த இப்படி இறங்கிட்டாங்களே!

பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric), குறைவான விலையில் மின்சார பைக் ஒன்றை சீக்கிரமே அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே அது ரோர் ஈசி (Rorr EZ) எனும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுவே நிறுவனம் அறிவித்திருந்த அந்த விலை குறைவான எலெக்ட்ரிக் பைக் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 89,999 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஓபென் ரோர் ஈசி ஓர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இ-பைக் ஆகும். அதாவது, ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) மற்றும் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) போல தினசரி வழக்கமான பயன்பாட்டிற்கு உதவக் கூடிய ஓர் பேட்டரியால் இயங்கும் இரண்டு சக்கர வாகனமே இதுவாகும்.

Oben rorr ez front look

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த மின்சார பைக் விற்பனைக்கு வந்திருக்கின்றது. 2.6 kWh, 3.4 kWh மற்றும் 4.4 kWh ஆகியவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்றே ரூ. 89,999 என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், இரண்டாவதாக இருக்கும் 3.4 kWh-க்கு ரூ. 99,999 விலையும், 4.4 kWh பேட்டரி பேக் தேர்விற்கு ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. இந்த விலைகளானது அறிமுக கால சலுகை விலையாகும்.

Oben electric unveils rorr ez

எனவே குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த விலையில் ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் கிடைக்கும். எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி பேக்கே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மிக அதிக உஷ்ணத்தை தாங்கும் திறன் கொண்டதே இந்த பேட்டரி பேக் ஆகும்.

மேலும், இரண்டு மடங்கு அதிக ஆயுட்காலத்தையும் அது கொண்டிருக்கும். இதுதவிர, இந்தியாவின் அனைத்து விதமான காலநிலைக்கு ஏற்றதாகவும் இந்த பேட்டரி பேக் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், தீ விபத்து பற்றிய பயம் இல்லாமல் இந்த வாகனத்தில் பயணிக்கலாம். எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிமீ ஆகும்.

இதனால் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். ரேஞ்சைப் பொருத்த வரை ஒரு முழு சார்ஜில் இந்த பைக் 110 கிமீ முதல் 175 கிமீ வரையில் ரேஞ்ச் வழங்கும். பேட்டரி பேக்கைப் பொருத்து ரேஞ்ச் திறன் மாறுபடும்.

மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ (Eco), சிட்டி (City) மற்றும் ஹவோக் (Havoc) ஆகியவையே அவை ஆகும். இதேபோல் சிறப்பம்சங்களையும் மிக தாராள மனதுடன் ஓபென் எலெக்ட்ரிக் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஜியோ ஃபென்சிங், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், டிஏஎஸ் மற்றும் யுபிஏ உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது.

ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக்கின் வருகை இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ரோட்ஸ்டர் இ-பைக்கிற்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை இ-பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். இது ரூ. 74,999க்கே விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டே ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் தன்னுடைய மலிவு விலை மின்சார பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2024, 13:25 [IST]
English summary
Oben electric unveils rorr ez affordable electric motorcycle in india priced at inr 89 999
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+