வேற எப்பவும் இப்படி ஒரு சலுகை கிடைக்காது! குறிப்பா 25,000 ரூபா கம்மி பண்ணுறதுலாம் ரொம்ப பெரிய மேட்டர்!..

ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric), அதன் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல் ஒன்றிற்கு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. ஒபென் ரோர் (Oben Rorr) எனும் எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கே அது சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. இப்போது இந்த பைக்கை வாங்கினால் ரூ. 25 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும்.

இந்த அளவிற்கு பெரும் தொகையையே ஒபென் தற்போது தள்ளுபடி செய்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 999-க்கு விற்கப்பட்டு வந்த இந்த எலெக்ட்ரிக் பைக், தற்போது விலை தள்ளுபடியால் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999க்கே விற்பனைக்கேக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.

Oben rorr independence day offer

இது ஓர் குறுகிய கால சலுகை ஆகும். ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். நிறுவனத்தின் அனைத்து ஷோரூம்களிலும் இந்த தள்ளுபடியின்கீழ் ரோர் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியர்களின் இ-பைக் தாகத்தை தீர்க்கும் ஓபென் எலெக்ட்ரிக், இந்த ரோர் எனும் அட்டகாசமான எலெக்ட்ரிக் பைக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்குக் களமிறக்கியது. மேலும், அறிமுக சலுகையாக ரூ. 99,999-க்கு விற்பனைக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.

பலதரப்பட்ட சிறப்புகளை தாங்கியிருக்கின்ற ஓர் எலெக்ட்ரிக் பைக் மாடலே ஓபென் ரோர் ஆகும். அந்த வகையில் ஓபென் ரோரின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாக அதன் வேக திறன் இருக்கின்றது. இது மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும். இதற்காக 8 kW திறன் கொண்ட ஐபிஎம்எஸ்எம் மோட்டாரே ரோர்-இல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3 செகண்டுகளே போதுமானது. இதுமட்டுமில்லைங்க, இந்த பைக்கில் ஓர் முழு சார்ஜில் 187 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 4.4 kWh பேட்டரி பேக்கே ரோர் இ-பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரங்களே போதுமானது. இதேபோல், தொழில்நுட்ப வசதிகளிலும் ரோர் எலெக்ட்ரிக் பைக் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இணைப்பு வசதி என நவீன கால அம்சங்கள் பல அதில் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், இதுபோல இன்னும் பல அம்சங்கள் பல இந்த எலெக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இது ஓர் கவர்ச்சியான பைக்காகவும் காட்சியளிக்கின்றது. இதற்கு அழகு சேர்க்கும் விதமாக வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி லைட்டுகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி வால் பகுதி மின் விளக்கு ஆகியவை அப்பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓபென் ரோர், இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆதிக்கமே மிகப் பெரிய அளவில் இருந்து வருகின்ற காலத்தில் இ-பைக் பிரிவை அலங்கரிக்கும் விதமாக வந்த ஓர் தரமான எலெக்ட்ரிக் பைக் ஆகும். இதன் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலேயே தயாரிப்பு நிறுவனம் அதற்கு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 10:34 [IST]
English summary
Oben rorr electric bike offers rs 25000 discount this independence day
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+