ரூ. 69,999க்கு இவ்ளோ சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா! ஒடைசி ஸ்நேப் என்கிற பெயரில் ஓலாவுக்கு வந்த புதிய ஆப்பு!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன (Eectric Two Wheeler) உற்பத்தி நிறுவனம் ஒடைசி (Odysse). இந்த நிறுவனம் மலிவு விலையில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஒடைசி இ2 (Odysse E2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்துடன், அது ஸ்நேப் (Snap) என்கிற பெயரில் மற்றுமொரு குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் இ2 என்பது குறைந்த வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

Odysse snap e2

அதேவேளையில், ஸ்நேப் சற்று அதிக வேகத்தில் இயங்கும். இதில் குறைந்த வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட இ2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே மிக மிக விலை குறைவானதாகக் காட்சியளிக்கின்றது. அதற்கு ரூ. 69,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஸ்நேப் மாடலுக்கு ரூ. 79,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒடைசி நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் எலெக்ட்ரிக் பைக் பிரிவை அலங்கரிக்கும் விதமாக வேடர் எனும் மின்சார பைக் மாடலையே விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த நிலையிலேயே அதன் ஸ்கூட்டர் பிரிவை அலங்கரிக்கும் விதமாக தற்போது ஸ்நேப் மற்றும் இ2 எனும் சூப்பரான விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Odysse snap e2 launched

ஒடைசி ஸ்நேப்: இதில் 2000 W எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயங்கும். இது அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 105 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 4 மணி நேரங்களே போதுமானது.

இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது எல்எஃப்பி வகை ஏஐஎஸ் 156 தர சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும். இந்த அம்சங்களுடன் சேர்த்து ஸ்நேப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வருகை ஓலா எஸ்1 எக்ஸ் மற்றும் ஒகினவா ரிட்ஜ் உள்ளிட்ட ஆரம்ப நிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஓடைசி இ2: இது ஓர் குறைந்த வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். 250 வாட் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகபட்ச வேகமே மணிக்கு 25 கிமீ மட்டும்தான். எனவே இதை ஓட்ட லைசென்ஸ் மற்றும் பதிவு சான்று என எதுவும் தேவைப்படாது.

அதேவேளையில் ஓர் முழு சார்ஜில் இந்த ஸ்கூட்டரில் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் ஆகும். அதேவேளையில், ஒடைசி ஸ்நேப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்த அனைத்து விதமான ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். குறிப்பாக, லைசென்ஸ், ஆர்டிஓ மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை கட்டாயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஏழைகளும் பயன்படுத்தும் விதமாக ஒடைசி தன்னுடைய இரண்டு புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றின் வருகையால் ஓலா எலெக்ட்ரிக், ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஒகினாவா ஆகிய நிறுவனங்களுக்கு அதிக போட்டியான சூழல் உருவாகி இருக்கின்றது. குறிப்பாக, ஓலாவிற்கு இதன் வருகை தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 18:20 [IST]
English summary
Odysse launched snap and e2 low speed e scooters in india here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+