ஒரு கிமீ பயணிக்க வெறும் 25 பைசா தான் செலவு! மே 2ம் தேதி வரப்போகும் புது இவி பத்தி தெரியுமா?
ஒகாயா நிறுவனம் இந்தியாவில் தனது அடுத்த புதிய எலெக்ட்ரிக் பைக் என்ற பைக்கை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த பைக் அறிமுகமாவதற்கு முன்னரே இதில் உள்ள சில சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் எல்லாம் தற்போது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இந்த பைக்கிற்கான புக்கிங்கும் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் எண்ணம் அதிகம் வந்துவிட்டது. இதனால் வாகன தயாரிப்பாளர்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை விதவிதமாக தயாரிக்க துவங்கி விட்டார்கள். இந்நிலையில் ஒகாயா நிறுவனம் வரும் மே மாதம் 2ம் தேதி இந்திய மார்க்கெட்டில் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஒகாயா நிறுவனத்தின் ப்ரீமியம் பிராண்டான ஃபெரட்டோ என்ற பிராண்டின் கீழ் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த பைக்கின் அறிமுகத்திற்கு முன்னரே இந்த பைக் குறித்த சில முக்கியமான தகவல்களை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஒகாயா டிஸ்டரப்ட் பைக்கின் புக்கிங்கை அந்நிறுவனம் ஏற்கனவே துவங்கி விட்டது. தற்போது புக்கிங்கை அந்நிறுவனத்தின் ஷோரூங்களிலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நடத்தி வருகிறது. முதலில் புக்கிங் விபரங்களை பற்றி பார்த்து விடுவோம்.
ஒக்காயா நிறுவனம் முதலில் புக் செய்யும் 1000 வாடிக்கையாளர்களுக்கு இந்த பைக்கை வெறும் ரூபாய் 500க்கு புக் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஆயிரம் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை புக் செய்து விட்டால் அடுத்து இந்த பைக்கை புக் செய்ய வேண்டும் என்றால் ரூபாய் 2500 செலுத்தி புக் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஓகாயா எலெக்டரிக் பைக்கை பொறுத்தவரை அதில் 3.97 கிலோ வாட் ஹவர் எல்எஃப்பி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இது பேட்டரியை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 129 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பைக்கை வாங்கி ஓட்டினால் மிகக் குறைந்த செலவிலேயே இந்த பைக்கை ஓட்ட முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்கை சார்ஜ் போட்டு ஓட்டும்போது ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வெறும் 25 பைசா மட்டுமே செலவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகத்தை பொறுத்த வரை அந்நிறுவனம் 95 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பைக் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக இந்த பைக்கில் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் விலை குறித்து தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த பைக்கின் அதிகாரபூர்வ அறிமுகத்தின் போது தான் இந்த பைக்கின் விலை குறித்த அனைத்து தகவல்களையும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பெட்ரோல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது அதிக லாபகரமானது என்ற பேச்சு இருந்து வருகிறது. இருந்தாலும் அது எந்த அளவிற்கு சரியானதாக இருக்கும் என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்து வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பைக் அமைந்துள்ளது.
இந்த பைக்கில் 100 கிலோமீட்டர் பயணம் செய்தாலும் வெறும் 25 ரூபாய் தான் செலவாகும். ஆனால் இன்று ஒரு லிட்டருக்கு 100 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கக்கூடிய பைக்கே கிடையாது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒரு ரூபாய். அப்படி பார்க்கும் போது இந்த பைக் மிகப்பெரிய லாபகரமான பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும் குறைவாக இருந்தால் நிச்சயம் ஏராளமானவர்கள் இந்த பைக்கை வாங்க வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓகாயா நிறுவனம் இந்த குறைந்த செலவில் இயங்கக்கூடிய பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பைக்கை வாங்கி பயன்படுத்தும் பலர் லட்சக்கணக்கில் பணத்தை மிச்சம் செய்யப் போகிறார்கள். இந்த பைக்கின் விலையை பொறுத்து தான் இதன் விற்பனை அமையும் என்பதால் இந்த பைக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகமாக வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications








