பெரிய பெரிய நிறுவனங்களே இத செய்ய யோசிப்பாங்க.. பழைய குறைவான விலையிலேயே இ-ஸ்கூட்டரை விற்க போறாங்க!
இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா இவி (Okaya EV)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனமே பண்டிகைக் கால சிறப்பு சலுகையை தற்போது அறிவித்து இருக்கின்றது. அந்நிறுவனம், அதன் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகனங்களை பழைய விலையிலேயே விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
இதுவே அந்த சலுகை ஆகும். ஆனால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மத்திய அரசு மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஃபேம்2 (Faster Adoption and Manufacture of Electric Vehicles II) திட்டத்தின்கீழ் மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது.

ஆகையால், மின்சார வாகனங்களின் விலை மிகப் பெரிய அளவில் குறைந்துக் காணப்பட்டது. ஆனால், இந்த திட்டம் தற்போது முடிவடைந்துவிட்டது. 2023-24 நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31தான் ஃபேம்2 திட்டத்திற்கான இறுதி நாளும்கூட. எனவே, புதிய திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், ஃபேம்2 திட்டத்தின் முடிவால் மின்சார வாகனங்கள் சிலவற்றின் விலை உயரும் அபாயம் உருவாகி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஒகாயா இவி தன்னுடைய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை அதே பழைய விலையிலேயே விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. ஆனால், அது குறுகிய காலம் வரை மட்டுமே கிடைக்கும் என்றும் அது நிபந்தனைகளை தெரிவித்து இருக்கின்றது.
ஆனால், இறுதி நாள் எது என்கிற தகவலை அது வெளியிடவில்லை. இப்போதைய நிலவரப்படி ஒகாயா இவி பிராண்டின்கீழ் ஃப்ரீடம், ஃபாஸ்ட் எஃப்2எஃப், ஃபாஸ்ட் எஃப்3, மோட்டோ ஃபாஸ்ட், ஃபாஸ்ட் எஃப்2பி, கிளாஸ்-ஐக்யூ பிளஸ், ஃபாஸ்ட் எஃப்2டி மற்றும் ஃபாஸ்ட் எஃப்4 ஆகிய எட்டு விதமான மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவற்றில் கிளாஸ்-ஐக்யூ பிளஸ் மாடலை தவிர மற்ற அனைத்திற்கும் சிறப்பு சலுகையை ஒகாயா இவி அறிவித்து இருக்கின்றது. இதனால், ரூ. 1,50,112ஆக இருந்த ஒகாயா ஃபாஸ்ட் எஃப்4 மாடலின் விலை இப்போது ரூ. 1,19,989 ஆக குறைந்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இதேபோல், 1,34,946 ரூபாயாக இருந்த ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 மாடலின் விலையை 1,09,990 ரூபாயாகவும், 93,999 ரூபாயாக இருந்த ஃபாஸ்ட் எஃப்2எஃப் மாடலின் விலையை ரூ. 79,950 ஆகவும் ஒகாயா இவி நிறுவனம் குறைத்திருக்கின்றது. இதேபோல், ஃபாஸ்ட் எஃப்2பி மாடலின் விலையை 1,09,233 ரூபாயில் இருந்து 89,950 ரூபாயாகவும், ஃபாஸ்ட் எஃப்2டி மாடலின் விலையை 1,05,092 ரூபாயில் இருந்து 92,900 ரூபாயாகவும் குறைத்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க நிறுவனத்தின் ஸ்லோஸ்பீடு (வேகம் குறைவான) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான ஃப்ரீடம் விலையையும் ரூ. 69,950 ஆக குறைத்திருக்கின்றது, ஒகாயா இவி. இது முன்னதாக, அதாவது, விலை குறைப்பிற்கு முன்னர் 75,899 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதைபோலவே மோட்டோஃபாஸ்ட் மாடலும் ரூ. 1,54,475 என்கிற அதிகபட்ச விலைக்கு விற்கப்பட்டு வந்தது.
இதன் விலையையும் மிகப் பெரிய அளவில் குறைத்து தற்போது 1,24,999 ரூபாயாக மாற்றி இருக்கின்றது. கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் வரை இதன் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. பெரிய பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு இணையாக மிகப் பெரிய விலைக் குறைப்பை ஒகாயா இவி அறிவித்து இருக்கின்றது.
இந்த சலுகை விலையால் ஒகாயா இவி-யின் மின்சார வாகனங்கள் விற்பனையில் நல்ல வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனமே இந்திய மின்சார இரண்டு வாகன உலகின் முன்னணி நிறுவனமாக, அதாவது, தலைவனாக இருக்கின்றது.
சென்ற மார்ச் மாதத்தில் இந்த ஒற்றை நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டுமே சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகின. இந்த மாதிரியான சூழலிலேயே ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் ஐக்யூக், பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி போன்ற நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக ஒகாயா சலுகையை அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இருக்கின்றது. 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் ஒரே மாதத்தில் விற்பனையாகுவது என்பது ஆச்சரியமளிக்கக் கூடிய ஓர் விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








