இன்னும் 11 நாள்தான் இருக்கு.. ரூ. 1 கையில இருந்தா இ-ஸ்கூட்டரை புக் பண்ணலாம்.. விலையையும் கம்மி பண்ணிட்டாங்க!
மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி (Okaya EV), அதன்அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (e-scooter)-களின் விலையையும் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விலை குறைப்பானது ஆகஸ்டு மாதத்தை முன்னிட்டே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த மாதத்திற்கு மட்டுமே நிறுவனத்தின் விலை குறைப்பு பொருந்தும். இதுதவிர, சிறப்பு திட்டமாக ரூ. 1-க்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புக் செய்யும் வசதியையும் நிறுவனம் தொடங்கி வைத்திருக்கின்றது. ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்த வரிசையிலேயே தற்போது ஒகாயா இவி-யும் இணைந்துள்ளது. ஒகாயா இவி-யின் முக்கிய தயாரிப்புகளாக மோட்டோஃபாஸ்ட் (Motofasst), ஃபாஸ்ட் எஃப்3 (Fasst F3), ஃபாஸ்ட் எஃப்4 (Fasst F4), ஃபாஸ்ட் எஃப்2பி (Fasst F2B), ஃபாஸ்ட் எஃப்2டி (Fasst F2T), ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Fasst F2F) மற்றும் ஃப்ரீடம் (Freedom) ஆகியவை இருக்கின்றன.

இவற்றின் விலையையே மிகப் பெரிய அளவில் நிறுவனம் தற்போது குறைத்திருக்கின்றது. எவ்வளவு குறைச்சிருக்காங்கனு தானே கேக்குறீங்க. முன்னதாக ரூ. 1 லட்சத்து 54 ஆயிரமாக விற்கப்பட்ட மோட்டோஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இப்போது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், ஃபாஸ்ட் எஃப்3 மாடலின் விலை ரூ. 1.34 லட்சத்தில் இருந்து ரூ. 1.09 லட்சமாகவும், ஃபாஸ்ட் எஃப்4 மாடலின் விலை ரூ. 1.50 லட்சத்தில் இருந்து ரூ. 1.19 லட்சமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஃபாஸ்ட் எஃப்2பி மாடலின் விலை முன்னதாக 1.09 லட்ச ரூபாக்கும் அதிகமாக இருந்தநிலையில் தற்போது அதன் விலை ரூ. 94,998 ஆக குறைக்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், ஃபாஸ்ட் எஃப்2டி மாடலின் விலை ரூ. 1.05 லட்சத்தில் இருந்து ரூ. 94,998 ஆகவும், ஃபாஸ்ட் எஃப்2எஃப் மாடலின் விலை ரூ. 87,802 இல் இருந்து ரூ. 83,999 ஆகவும், ஃப்ரீடம் மாடலின் விலை ரூ. 78,557ல் இருந்து ரூ. 74,899 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த விலை குறைப்பு இம்மாதம் முடிவு வரை மட்டுமே கிடைக்கும். ஒகாயா இவி இந்த மாடல்கள் மட்டுமின்றி ஃபெர்ரடோ டிஸ்டரப்டர் எனும் எலெக்ட்ரிக் வாகனத்தையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு எந்த சலுகைகளையும் அது அறிவிக்கவில்லை. ஆகையால், ரூ. 1.6 லட்சம் என்கிற அதே விலையிலேயே அது விற்கப்படுகின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனம் அதிக ரேஞ்ஜ் தரும் மற்றும் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய தயாரிப்பாக பெர்ரடோ டிஸ்ரப்டர் காட்சியளிக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 129 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிமீ ஆகும். இந்த சூப்பரான இயக்க திறனுக்காக பிஎம்எஸ் வகை எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 6.37 kW பவரை வெளியேற்றும். இது 8.54 பிஎச்பி இணையானது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை சமீப சில தினங்களாக அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே கொஞ்சம் கால தாமதமாக ஒகாயா இவி அதன் விலை தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. லேட்டாக தன்னுடைய சலுகைகளை அறிவித்தாலும் அது லேட்டஸ்ட்டான சலுகையையே அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த ஆஃபருக்கு மின்சார வாகன காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








