செம்ம தில்லான ஆளா இருப்பாங்க போலையே.. ஓலாவுக்கு போட்டியா இவ்ளோ பெரிய தொகையை குறைச்சிருக்காங்களா!..
இந்தியாவின் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) உருவெடுத்து இருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள அது பெரும் போராட்டாங்களைச் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது என்றே கூறலாம்.
ஏனெனில் போட்டி நிறுவனங்கள் இதற்கு கடுமையான நெருக்கடியை வழங்கும் விதமாக தொடர்ச்சியாக புதுமுக வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டே இருக்கின்றன. இதனாலேயே அந்நிறுவனம் தன்னுடைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதை தொடர் கதையாக்கி இருக்கின்றது. அந்தவகையில், நேற்றைய தினம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பெரும் தள்ளுபடியை அதன் எஸ்1 வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அறிவித்தது.

ரூ. 25 ஆயிரம் வரையில் அது விலை குறைப்பைச் செய்திருக்கின்றது. இந்த விலைக் குறைப்பானது அதன் போட்டியாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதன் விளைவாக நிறுவனத்தின் உயர்நிலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான எஸ்1 ப்ரோவின் விலை பெருமளவில் சரிந்துக் காணப்படுகின்றது.
ரூ. 1.47 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த நிலையில் அதன் விலை ரூ. 1,29,999 ஆக குறைந்திருக்கின்றது. இதேபோல், எஸ்எ1 ஏர் விலை ரூ. 1.19 லட்சத்தில் இருந்து ரூ. 1.04 லட்சமாக குறைந்திருக்கின்றது. இதேபோல், எஸ்1 எக்ஸ் பிளஸ் (3 kWh) தேர்வின் விலையும் ரூ. 1,09,999இல் இருந்து ரூ. 84,999 ஆக குறைந்துள்ளது.

இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஓலா இவ்வாறு விலையைக் குறைத்த உடனேயே போட்டி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில், இந்தியாவின் மற்றுமொரு முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி தற்போது விலை குறைப்பை அறிவித்து இருக்கின்றது.
அது ரூ. 18 ஆயிரம் வரை அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்திருக்கின்றது. இந்த விலைக் குறைப்பு நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என ஒகாயா இவி தெரிவித்து இருக்கின்றது. அதேவேளையில், இந்த விலை தள்ளுபடியானது வருகின்ற 29 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்றும் அது காலக்கெடுவை நிர்ணயித்து இருக்கின்றது.
ஆமாங்க, இந்த மாத இறுதி வரை மட்டுமே குறைவான விலையில் ஒகாயா இவி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ள முடியும். ஓலா எலெக்ட்ரிக்கும் அதன் ஆஃபரை இந்த மாத இறுதி வரைக்கு மட்டுமே அறிவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒகாயாவின் விலை குறைப்பு நடவடிக்கையால் அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடலான ஃபாஸ்ட் எஃப்4 (Faast F4)-இன் விலை ரூ. 1,37,990 இல் இருந்து ரூ. 1,19,990 ஆக குறைந்திருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 140 கிமீ தொடங்கி 160 கிமீ வரையில் ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது இரண்டு பேட்டரிகளைத் தாங்கிய வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. மொத்த மின்சார அவுட்புட் 4.4 kWh ஆகும்.
இதுவே இந்தியாவின் பெரிய திறன் கொண்ட பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இதேபோல், நிறுவனத்தின் மற்ற மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கன்றது. அந்தவகையில், ஃபாஸ்ட் எஃப்3 (Faast F3) இன் விலை ரூ. 1,24,990 இல் இருந்து ரூ. 1,09,990 ஆகவும், மோட்டோஃபாஸ்ட் (Motofaast) மாடலின் விலை ரூ. 1,41,999 இல் இருந்து ரூ. 1,28,999 ஆகவும் குறைந்திருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, ஃபாஸ்ட் எஃப்2எஃப் (Faast F2F) மாடலின் விலை ரூ. 93,999 இல் இருந்து ரூ. 83,999 ஆகவும், ஃபாஸ்ட் எஃப்2பி (Faast F2B) மாடலின் விலை ரூ. 1,02,950 இல் இருந்து ரூ. 93 ஆயிரத்து 950 ஆகவும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.
இவை மட்டுமல்ல நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான ஃபாஸ்ட் எஃப்2டி (Faast F2T) ரூ. 92,900க்கும், ஃப்ரீடம் (Freedum slow speed) எனும் வேகம் குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 74,899க்கும் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. ஒகாயாவின் இந்த அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஐகாட் (ICAT) சான்று பெற்ற தயாரிப்புகள் ஆகும்.
AIS 156 திருத்தம் III கட்டம் 2 (AIS 156 Amendment III Phase 2) கீழே இந்த சான்று ஒகாயாவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் அதிக பாதுகாப்பானதாக வடிவமைத்திருக்கின்றது.
மிக முக்கியமாக ஐபி67 சான்று பெற்றதாக அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் காட்சியளிக்கின்றது. அதாவது, மழை மற்றும் தூசியால் இந்த வாகனத்தின் முக்கிய கூறுகளான பேட்டரி மற்றும் மின்சார மோட்டார் பாதிப்படையாது என்பதே இதன் பொருள் ஆகும். இத்தகைய திறன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே தற்போது ஒகாயா இவி விலை குறைப்பை அறிவித்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் அதன் போட்டியாளர்களுக்கு போட்டியளிக்க மட்டுமல்ல, குறிப்பாக, பெட்ரோல் டூ-வீலர்களுக்கு நெருக்கடிக் கொடுக்கும் பொருட்டே விலை தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் வரிசையில் தற்போது ஒகாயா இவியும் இணைந்திருக்கின்றது. ஆகையால், அடுத்து வரும் மாதத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








