ரூ. 1.60 லட்சத்திற்கு இப்படி ஒரு இ-பைக்கா! இதுல 1கிமீ டிராவல் பண்ண வெறும் 25 பைசா மட்டும்தான் செலவாகும்!
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த எலெக்ட்ரிக் பைக் மாடல் ஒன்று தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கின்றது. இந்த பைக்கின் விலை எவ்வளவு? ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் எத்தனை கிமீ தூரம் பயணிக்க முடியும்? மற்றும் புதுமுக இ-பைக்கின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
பிரபல மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா இவி (Okaya EV), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதுமுக எலெக்ட்ரிக் பைக் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டிஸ்ரப்டர் (Disruptor) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே அது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. தனது ஃபெர்ரடோ (Ferrato) பிராண்டின்கீழே இந்த புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை ஒகாயா இவி அறிமுகம் செய்திருக்கின்றது.

இது ஓர் பிரீமியம் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான பிராண்ட் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபெர்ரடோ டிஸ்ரப்டர் எலெக்ட்ரிக் பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 999 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்போர்ட்ஸ் பைக்கை இயக்கும் அனுபவத்தை மலிவு இயக்க செலவில் வழங்கும் ஓர் பைக்காகவே இதனை ஒகாயா இவி வடிவமைத்திருக்கின்றது. இந்த பைக்கில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 25 பைசா மட்டுமே செலவாகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 129 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம்.

ரேஞ்ஜ் தருவதில் மட்டுமல்ல திறனை வெளியேற்றுவதிலும் மிக சிறந்த பைக் மாடலாக ஃபெர்ரடோ டிஸ்ரப்டர் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஃபெர்ரடோ டிஸ்ரப்டர் இ-பைக்கில் 6.37 kW பவரை வெளியேற்றும் பிஎம்எஸ்எம் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 95 கிமீ ஆகும்.
இத்துடன், மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த இ-பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ (Eco), சிட்டி (City) மற்றும் ஸ்போர்ட்ஸ் (Sports) ஆகியவையே அவை ஆகும். ஒவ்வொரு ரைடிங் மோடும் வெவ்வேறு விதமான இயக்க வேகத்தை வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் அதிக ரேஞ்ஜ் திறனுக்காக 3.97 kWh லித்தியம் எல்எஃப்பி பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் 270 டிகிரி செல்சியஸ் வரை தாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இந்தியாவிற்கு ஏற்ற பைக் மாடல் இதுவாகும். இதுதவிர, ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரியையே இது பயன்படுத்தி இருக்கின்றது.
மேலும், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் 3 ஆண்டுகள் / 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டியையும் ஒகாயா இவி அறிவித்து இருக்கின்றது. இந்த சிறப்பு திட்டத்துடன் சேர்த்து மிக சூப்பரான இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக டிஸ்க் பிரேக்குகள், அலாய் வீல்கள் மற்றும் முன் வீலில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், டிஜிட்டல் ஹைபிரிட் திரை ஒன்றும் இ-பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ரைடின்போது மிக சிறந்த டிஜிட்டல் ரைடு அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, இந்த பைக்கில் ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை ஒகாயா இவி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு, ஜிபிஎஸ் இணைப்பு வசதி, ஜியோ ஃபென்சிங், ஃபைன்ட்-மை-வெயிக்கிள் (வாகனத்தைக் கண்டறியும் வசதி) என ஏகப்பட்ட வசதிகளை இந்த ஃபெர்ரடோ டிஸ்ரப்டர் இ-பைக்கில் ஒகாயா இவி வழங்கியிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே ஒகாயா இவி அதன் ஃபெர்ரடோ பிராண்டின்கீழ் டிஸ்ரப்டர் எலெக்ட்ரிக் பைக்கை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








