ரூ50,000த்திற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா? ஏப்.15ல் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போகும் ஓலா!

ஓலா நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக தற்போது தெரிவித்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் தனது ஓலா எஸ்1எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைத்து தனது அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் அதன் திறன் தான் மக்கள் விரும்பும் வகையில் இருப்பதால் மக்கள் இந்த வாகனங்களை தான் அதிகம் விரும்புகிறார்கள்.

ola april 15

இந்நிலையில் ஓலா நிறுவனம் கடந்தாண்டு ஓலா எஸ்ஒன் ஏர் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்த மூன்று வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. மூன்று வேரியன்ட்களுக்கும் பேட்டரி பவர் தான் வித்தியாசமாக இருக்கிறது. இரண்டு கிலோ வாட் ஹவர் மூன்று கிலோ வாட் ஹவர், நான்கு கிலோ வாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனையாகி வருகிறது.

இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொறுத்தவரை இரண்டு கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கில் ரூபாய் 79,999 என்ற விலையிலும், 3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டரை ரூபாய் 89,999 என்ற விலையிலும், நான்கு கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1.10 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்து வருகிறது.

ola april 15

மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தால் மக்கள் பலர் வாங்குவார்கள் என்ற பேச்சு இருக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில் ஓலா நிறுவனம் தனது எஸ்1எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி ஓலா நிறுவனம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்து பார்க்கும்போது ஓலா நிறுவனம் தனது எஸ்1எக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைத்து வெளியிடப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வளவு குறைக்க போகிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நிச்சயம் இது குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

ola april 15

தற்போது உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைக்க போகிறார்களா அல்லது இதை விட குறைவான விலை கொண்ட வேரியன்டை அறிமுகப்படுத்துகிறார்களா என்ற தகவலும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை 1 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானால் இதைவிட விலை குறைவாக இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ரூபாய் 50 ஆயிரத்துக்கு இதை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

தற்போது விற்பனையாகி வரும் ஓலா எக்ஸ்1எக்ஸ் 2கிலோ வாட்ஹவர் பேட்டரி ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் 91கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள 7.4மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. எக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ் என மூன்று விதமான டிரைவ் மோடுகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 85கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை இதற்கு முந்தையே இரண்டு கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட ரேஞ்ச் மட்டும் அதிகமாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 151 கிலோ மீட்டர் ரேஞ்ச் தருகிறது.

அதிகபட்ச வேகமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்கிறது. மற்ற அனைத்து ஆப்ஷன்களும் அதே போல தான் இருக்கிறது. 4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டரை பொறுத்தவரை 190 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்த நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் மக்கள் விரும்பும் அனைத்து ஆப்ஷன்களும் கொண்டதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து ஒலா நிறுவனம் நம்பர் ஒன் இடத்தில் இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 16:17 [IST]
English summary
Ola april 15 price revision on s1x ev details what we know
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X