அமேசான் எல்லாம் ஓரமா போ! ஓலாவின் இந்த பிளான் தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க!
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நேற்று சங்கல்ப் 2024 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்திய நிலையில் கூடுதலாக சில அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தது. அதன்படி ஓஎன்டிசி இணைப்பு, 100 சதவீத எலெக்ட்ரானிக் லாஜிஸ்டிக், செயற்கை நுண்ணறிவு டிஸ்கவரி, சுலபமான கடன் வசதி, ஆட்டோமேட்டிக் செய்யப்பட்ட குடோன்கள், மேம்படுத்தப்பட்ட வாகன தயாரிப்பு தொழில்நுட்ப சிஸ்டம், லாயல்டி புரோக்ராம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நேற்று ஆகஸ்ட் 15ம் தேதியை முன்னிட்டு தனது புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் நேற்று அறிமுகமானது. இது இத்துடன் சேர்ந்து கூடுதலாக அந்நிறுவனம் தயாரிக்கும் செல் மற்றும் பேட்டரி பேக் குறித்த அறிமுகம், மூன்றாம் தலைமுறை பிளாட்பார்ம் மற்றும் மூவ் ஓஎஸ்5 அப்டேட்களும் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் போது ஓலா நிறுவனம் மற்றும் மற்ற சில அறிவிப்புகளையும் வெளியிட்டது. அதன்படி அந்நிறுவனம் டுத்த ஓஎன்டிசி தொழிற்நுட்பத்தில் தனது தொழிலை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி ஓலா ஃபுட் மற்றும் பலசரக்கு ஆகிய தொழில் பெங்களூருவில் தினம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஓலா கன்ஸ்யூமர் என்ற பிராண்டின் கீழ் ஒஎன்டிசி தளத்தில் புதிய கேட்டகிரிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் சப்ளையர்களுக்கு ஓர் ஆண்டுக்கான இலவச குருடிரிம் கிளவுட் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், நேரடியாக வாடிக்கையாளர்களை சென்று சேர்க்கும் நிறுவனங்களுக்கும், சிறு குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும் வசதியாக இருக்கும். ஒலா கேப்ஸ் நிறுவனம் ஒரு கன்ஸ்யூமர் என ரீபிராண்ட் செய்யப்பட்டடுள்ளது.இதில் கேப்ஸ், டெலிவரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஷாப்பிங் கோ-பைலட் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அவர்களது ஷாப்பிங் அனுபவத்தை பெற முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்தில் இருந்து அவர்களை சரியாக கண்டுபிடித்து அவர்களுக்கு தேவையான விஷயங்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து ஆர்டரை பெற முடியும்.
இந்த தொழிற்நுட்பம் இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள ஆன்லைன் வர்த்தக அமைப்பை விட இது முற்றிலும் மாறுபட்டதாக ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் அவர்களது விருப்பத்தை அறிந்து செயல்படும் வகையில் இந்த தளம் உருவாக்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் லாஜிஸ்டிக்ஸ்: ஓலா நிறுவனம் தற்போது ஓலா கன்ஸ்யூமர் என்ற டெலிவரி பிசினஸை துவங்கி உள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய முடியும். இந்த தொழிலில் ஈடுபடும் டெலிவரி பார்ட்னர்களுக்கான போக்குவரத்து வசதியை முழுமையாக எலெக்ட்ரிக் வாகனம் மூலம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்திற்கான செலவு வெகுவாக குறைகிறது.
ஓலா கிரெடிட் மற்றும் ஓலா பே நிறுவனம் தற்போது டாடா கேப்பிட்டல் மற்றும் இன்கிரீட் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து தனி நபர்களுக்கான கடன்களை வழங்கி வருகிறது. 100 சதவீதம் டிஜிட்டல் முறையில் இந்த கடன்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டும். இதையும் மேம்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதன் மூலம் வாகன கடன் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோக தானியங்கி முறையில் செயல்படும் குடோன்களையும் கட்டமைக்க ஓலா நிறுவனம் முடிவு செய்து, ஓலா கன்ஸ்யூமர் பிசினஸ்க்காக அந்நிறுவனம் இப்படியான குடோன்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக எஃப்எம்சிஜி மற்றும் டிடுசி பிராண்டுகளுடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை தங்கள் குடோனில் வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஓலா கன்ஸ்யூமர் பிசினஸிற்காக இந்நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த டூவீலர்களை பயன்படுத்தி ஓலா கன்ஸ்யூமர் தொழிலில் உள்ள டெலிவரி பார்ட்னர்கள், தங்கள் டெலிவரி பிசினஸை செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் மீண்டும் ஷேர் ரைடிங்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 20 நிமிடங்களுக்கும் குறைவான தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக இந்த முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் அதிகபட்சமாக 2 பயணிகள் மட்டுமே ஒரே நேரத்தில் பயணிக்க கூடிய வகையில் இது திட்டமிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை செய்து வருகிறது என்றே சொல்லலாம். இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்து எப்படி எல்லாம் அதை டெவலப் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் அதை டெவலப் செய்து வருகிறது. அடுத்த தொழிலை இதன் மூலம் டெவலப் செய்து எதிர்காலத்தில் மிக முக்கியமான நிறுவனமாக இது திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









