போற போக்க பாத்தா டாஸ்மாக்கை மிஞ்சிரும் போலையே... விற்பனையில் தொடர்ச்சியாக உச்சம் தொடும் ஓலா எலெக்ட்ரிக்..

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooter) கடந்த பிப்ரவரி மாதத்திலும் மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரலாற்று சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளராக உருவெடுத்திருக்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், சென்ற பிப்ரவரி மாதத்தில் மட்டும் 35 ஆயிரம் யூனிட்டுகள் எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைச் செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இதுபோன்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது இது முதல் முறையல்ல.

Ola electric announced recorded 35 000 registrations in february 2024

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று அதிக எண்ணிக்கையில் அந்த நிறுவனத்தின் மின்சார இரு சக்கர வாகனங்கள் (எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்) விற்பனையாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், ஒவ்வொரு மாதமும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்ட வண்ணம் இருக்கின்றன என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் மிக மிக அதிக எண்ணிக்கையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் பெற்றிருக்கும் விற்பனை இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

Ola electric announced recorded 35 000 registrations in february 2024

ஒட்டுமொத்த எலக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் 42 சதவீத பங்கை ஓலா எலக்ட்ரிக் என்ற இந்த ஒற்றை நிறுவனம் பெற்றிருக்கின்றது. பத்துக்கும் மேற்பட்ட மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், இந்த மாபெரும் சந்தைப் பங்கை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களாக (டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி) தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த பிராண்ட் விற்பனைச் செய்திருக்கின்றது.

இதுவும் வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஆகும். ஏனெனில், இந்த மூன்று மாதங்களில் மட்டும் ஓலா நிறுவனம் சுமார் 1 லட்சம் யூனிட்டுகள் வரையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை பதிவு செய்திருக்கின்றது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த அளவிற்கு அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் அதிரடியாக ரூ.25,000 வரையில் கடந்த மாதத்தில் குறைந்து கொள்ளப்பட்டன.

இந்த விலை குறைப்பு 2024 பிப்ரவரி மாதம் முழுவதும் இருக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருந்த நிலையில், இந்த சலுகை விலைகள் இந்த 2024 மார்ச் மாதத்திற்கும் நீட்டிக்கப்படுவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ரூ.79,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதிகபட்ச விலை ரூ.1.29 லட்சம் ஆகும். இது எஸ்1 புரோ-வின் விலை ஆகும். இருப்பதிலேயே விலை குறைவான தேர்வாக ஓலா எஸ்1 எக்ஸ் 2 kWh இருக்கின்றது. இது ஓர் ஃபுல் சார்ஜில் 95 கிமீ வரை ரேஞ்ஜ் தரும்.

10.9 செமீ அளவுள்ள திரை, ஃபிசிக்கல் சாவி ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும். இது ஓர் மலிவு விலை தயாரிப்பு என்பதால் சிறப்பம்சங்கள் சற்று குறைவாகவே இடம் பெற்றிருக்கும். அதேவேளையில், உயர்நிலை தேர்வான எஸ்1எக்ஸ் மாடலில் சிறப்பம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், இதைவிட அதிக சிறப்பு வசதிகள் மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியதாக எஸ்1 புரோ இருக்கின்றது.

Ola electric announced recorded 35 000 registrations in february 2024

இது ஓர் முழு சார்ஜில் 195 கிமீ ரேஞ்ஜை வழங்கும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ ஆகும். இதுதவிர, வெறும் 2.6 வினாடிகளிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதுபோன்று பல வசதிகளை இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதனுள் தாங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் இதை அடிக்க ஒரு ஆள் பிறந்துதான் வரனும் போல என கூறும் அளவிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்கு அபரீதமான விற்பனை வளர்ச்சி பாதையை நோக்கி ஓலா எலெக்ட்ரிக் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 2, 2024, 5:00 [IST]
English summary
Ola electric announced recorded 35000 registrations in february 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X