இதுக்கு மேலே விலையை குறைச்சா ஸ்கூட்டரை சும்மா தான் தரணும்!! இன்னும் 3 நாள் தான் இருக்கு!!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் தீபாவளி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக்கில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ரூ.25,000 வரையில் குறைந்த விலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக ரூ.30,000 வரையிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், விற்பனையில் இருக்கும் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஓலா எலக்ட்ரிக், பெங்களூரை சேர்ந்த முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனம். இந்தியாவின் டாப்-10 இடத்திற்குள் உள்ள ஒரே இவி உற்பத்தி நிறுவனம். ஆனால், இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் உற்பத்தியில் கடைசியாக இறங்கிய நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தின் போதுதான் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா அறிமுகம் செய்தது.

ola announces 72 hours rush

அதன்பின், அது வாடிக்கையாளர்களை சென்றடைவதற்குள் 2022ஆம் ஆண்டு வந்துவிட்டது. ஆனால், மற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, அவ்வப்போது ஓலாவில் இருந்து வரும் சலுகைகள் ஆகும். அந்த வகையில், வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த 1 மாத காலமாக 'ஓலா பிக்கெஸ்ட் சீசன் சேல்' என்கிற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், தற்போது மீண்டும் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.25,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. '72 மணிநேர விற்பனை' என்கிற பெயரில் இந்த சலுகையை ஓலா எலக்ட்ரிக் அறிவித்துள்ளது.

ola announces 72 hours rush

பெயருக்கேற்ப இந்த புதிய சலுகை 72 மணிநேரம், அதாவது 3 நாட்களுக்கு (அக்டோபர் 29, 30, 31) மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த சலுகையின்படி, ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் எது ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களும் ரூ.25,000 வரையிலான தள்ளுபடிகளை பெறலாம். மேலும், ரூ.30,000 மதிப்பிலான சலுகைகளும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சலுகையினால், ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் குறைந்தப்பட்ச விலை ஆனது ரூ.74,999 ஆக குறைந்துள்ளது. கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.30,000 மதிப்பிலான சலுகைகளின்படி, 8 வருட/80,000கிமீ-க்கான உத்தரவாதத்தை இலவசமாக பெற முடியும். வழக்கமாக இந்த உத்தரவாதத்திற்கு ரூ.7,000 செலுத்த வேண்டியிருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ola announces 72 hours rush

அத்துடன், குறிப்பிட்ட சில கிரெட் கார்ட் ஹோல்டர்களுக்கு ரூ.5,000 வரையிலான ஃபைனான்சிங் சலுகைகள், ரூ.6,000 மதிப்பிலான மூவ் ஓ.எஸ்+ அப்கிரேட் இலவசம், ரூ.7,000 வரையிலான இலவச சார்ஜிங் கிரெடிட்ஸ் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவற்றையும் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

தற்சமயம் சந்தையில் 3 விதமான ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எஸ்1 புரோ, எஸ்1 ஏர், எஸ்1 எக்ஸ் என்பன அவை ஆகும். இதில் எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2kWh, 3kWh மற்றும் 4kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.74,999-இல் இருந்து ரூ.1,14,999இல் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படியிருக்கையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்த தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் வரும் மாதங்களில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 20:08 [IST]
English summary
Ola electric announces 72 hours rush with discount offers check all details here
மேலும்... #ola #electric scooter #diwali #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X